செய்யூரில் கூட்டு பாலியல் வன்கொடுமை!

PC: http://www.chronicle.co.zw

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆருஷியின் பெற்றோர்?

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

முடிந்தது பரோல்:தினகரனை எச்சரித்து விட்டு கிளம்பிய சசிகலா…!

டெங்கு மரணங்கள்: மத்தியக்குழுவை ஏமாற்றிய தமிழக அரசு…!

#NoBraDay – ஏன்? எதற்கு ? எப்படி?

புகார் மனு:பன்னீரை அடுத்து மோடியை சந்திக்க இபிஎஸ் திட்டம்…!

காஞ்சிபுரம் மாவட்டத்தின் செய்யூரில் இருபது வயது பெண் ஒருவர் கத்தி முனையில் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவம் துயரகரமானதாக இருக்கிறது.

கூவத்தூரில் துணிக்கடை ஒன்றில் வேலை செய்துக் கொண்டிருந்த அந்த பெண், அதே கடையில் வேலை செய்து வந்த நண்பர் ஒருவரை வேலை முடிந்ததும் சந்திப்பது வழக்கமாக இருந்தது. பணி முடிந்த பிறகு,மாலை பொழுதுகளில் இருவரும் செய்யூரில் வந்து நேரம் செலவழிப்பார்கள். கடந்த திங்களன்று இருவரும் ஒரு மரத்திற்கு கீழே உட்கார்ந்திருந்த போது, குற்றவாளிகள் இருவரையும் பார்த்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கத்தி வைத்திருக்க, ஒருவர் மாறி ஒருவர் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள். மேலும், அந்த பெண்ணோடு இருந்த நபரை தாக்கியிருக்கிறார்கள்.

“சிலர் பைக்குகளில் வேகமாக போவதை பார்த்ததாக அக்கம்பக்கத்தினர் சொல்லியதை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடித்தோம்” என வழக்கை விசாரிக்கும் அதிகாரி சொல்லியிருக்கிறார். குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள், அவர்கள் குடிபோதையில் இருந்ததால் தான் இருவரையும் அணுகியதாக சொல்லியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*