ப்ரணாப் முகர்ஜிக்குத்தான் பிரதமராகும் தகுதி இருந்தது : மன்மோகன் சிங்

சபரிமலையில் பெண்கள்:“செக்ஸ் டூரிசமாக மாற்ற அனுமதியோம்” -தேவசம் போர்ட்…!

பன்னீருக்கு உச்சநீதிமன்றத்தில் ‘செக்’ வைத்த திமுக…!

தகுதி நீக்கம்: டெல்லியில் வெல்ல நினைக்கும் பன்னீர்…!

ஐந்து மூடை சிமெண்டில் அரசுப்பள்ளி:எடப்பாடி அரசின் ஊழல் சாதனை…VIDEO…!

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

“பிரணாப் முகர்ஜி நல்ல பிரதமராக இருந்திருப்பார் என நம்ப அத்தனை காரணங்களும் இருக்கிறது” என மன்மோஹன் சிங் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் குடியரசுத்தலைவரான பிரணாப் முகர்ஜியின் ‘தி கொலிஷன் இயர்ஸ் (The Coalition Years) எனும் புத்தக வெளியீட்டில் இவ்வாறு பேசியிருக்கிறார் மன்மோஹன் சிங்.இப்போது இருக்கும் அரசியல்வாதிகளிலேயே முகர்ஜி மிகவும் சிறப்பானவர் எனச் சொன்ன மன்மோஹன் சிங், அவர்கள் இருவரும் 1970களின் தொடக்கத்தில் நிதி அமைச்சகத்தில் ஒன்றாக வேலை செய்ததையும் நினைவு கூர்ந்திருக்கிறார்.

“அப்புறம், 2004 ஆம் ஆண்டு சோனியாஜி என்னை பிரதமர் ஆக்கினார்கள். இத்தனை திறமை இருந்தும் நான் பிரதமர் ஆகவில்லையே என வருந்தும் அளவு பிரதமர் பணிக்கு தேவையான அத்தனை தகுதிகளையும் உடையவர் பிரணாப்ஜி.அந்த விஷயத்தில் எனக்கு வேறு எந்த வழியும் இருந்திருக்கவில்லை என்பதும் அவருக்கு தெரியும். நான் தற்செயலாக அரசியல்வாதி ஆனேன், ஆனால்,பிரணாப்ஜி அவருடைய விருப்பத்தினால் தான் அரசியல்வாதி ஆனார்” என மன்மோஹன் சிங் தெரிவித்திருக்கிறார்.

ஒரு சாதாரண புத்தக வெளியீட்டு விழாவாக தொடங்கியது, எதிர்கட்சிகளின் பலத்தை காட்டும் மேடையாக மாறிப் போனது. முன்னாள் குடியரசுத் தலைவருடன், முன்னாள் பிரதமர் மன்மோஹன் சிங்கும் சேர்ந்து கொள்ள, சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், இந்திய மார்க்ஸிஸ்ட்-கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாரம் யெச்சூரி, திமுகவின் கனிமொழியும் மேடையில் இடம் பெற்றிருந்தனர்.

தன்னை போன்ற இளைய அரசியல்வாதிகளுக்கும் இந்த புத்தகம் முக்கியமான பாடமாக இருக்கும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.

tamilnadu political news

ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆருஷியின் பெற்றோர்?

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

முடிந்தது பரோல்:தினகரனை எச்சரித்து விட்டு கிளம்பிய சசிகலா…!

டெங்கு மரணங்கள்: மத்தியக்குழுவை ஏமாற்றிய தமிழக அரசு…!

#NoBraDay – ஏன்? எதற்கு ? எப்படி?

புகார் மனு:பன்னீரை அடுத்து மோடியை சந்திக்க இபிஎஸ் திட்டம்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*