கேரள இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி..!

”எத்தனை நாட்கள், நீங்களும், உங்கள் முட்டாள் பாஸும்” ஸ்வேதா கோதாரிக்கு உதயகுமார்…!

ரிபப்ளிக் சேனலில் நடக்கும் அநியாயங்கள் : ஸ்வேதா கோதாரி

பன்னீருக்கு போட்டியாக எடப்பாடிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு…!

பஞ்சாப் குர்தாஸ்பூர் :பாஜகவின் கோட்டையை கைப்பற்றிய காங்கிரஸ்…!
கேரளாவில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியான இடது சாரிகள் தோல்வியடைந்துள்ளார்கள்.பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜகவிடமிருந்து அத்தொகுதியை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியில் வேங்கரை சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.
இந்த தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் குஞ்சாலிக்குட்டி. காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இவர் வெற்றி பெற்று இருந்தார். இவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி. ஆனதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இந்த தொகுதிக்கு கடந்த 11ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. முஸ்லிம் லீக் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் இந்த முறையும் அந்த கட்சிக்கே காங்கிரஸ் கூட்டணியில் சீட் ஒதுக்கப்பட்டது. முஸ்லிம்லீக் சார்பில் கே.என்.ஏ.காதர் போட்டியிட்டார். ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தபஷீர், பாரதீய ஜனதா சார்பில் ஜனசந்திரன் உள்பட மொத்தம் 6 பேர் போட்டியிட்டனர்.
இன்று வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியின் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.என்.ஏ.காதர் முன்னிலையில் இருந்தார். இறுதியில் அவர் 23,310 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2-வது இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பஷீரும், எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த நஷீர் 3-வது இடத்திலும் இருந்தனர். பாரதீயஜனதா வேட்பாளர் 4-வது இடத்தில் இருந்தார். ஓட்டுகள் விவரம் வருமாறு:-

கே.என்.ஏ.காதர் (முஸ்லிம் லீக்) – 65,227.
பி.பி.பஷீர் (மார்க். கம்யூ) – 41,917.
நசீர் (எஸ்.டி.பி.ஐ.) – 8,648.
ஜனச்சந்திரன் (பாரதீய ஜனதா) – 5,728.
ஆளும் கட்சியாக உள்ள இடதுசாரிகள் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் பாஜக நான்காவது இடத்தைப் பெற்றது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*