டிரம்புக்கு மோடி கட்டிப்பிடி வைத்தியம் செய்ய வேண்டும்:ராகுல் கிண்டல்…!

Washington : President Donald Trump and Indian Prime Minister Narendra Modi hug while making statements in the Rose Garden of the White House in Washington, Monday, June 26, 2017. AP/PTI(AP6_27_2017_000042B)

”எத்தனை நாட்கள், நீங்களும், உங்கள் முட்டாள் பாஸும்” ஸ்வேதா கோதாரிக்கு உதயகுமார்…!

ரிபப்ளிக் சேனலில் நடக்கும் அநியாயங்கள் : ஸ்வேதா கோதாரி

பன்னீருக்கு போட்டியாக எடப்பாடிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு…!

 

சபரிமலையில் பெண்கள்:“செக்ஸ் டூரிசமாக மாற்ற அனுமதியோம்” -தேவசம் போர்ட்…!
பாகிஸ்தான் தொடர்பாக தன் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டு வரும் டிரம்புக்கு மோடி இன்னொரு கட்டிப்பிடி வைத்தியம் செய்ய வேண்டும் என்று டுவிட்டரில் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி.

பாகிஸ்தான் தீவிரவாதிகளால் 2013-ஆம் ஆண்டு கடத்தப்பட்ட அமெரிக்க- கனடா தம்பதியரை பாகிஸ்தான் ராணுவம் சமீபத்தில் மீட்டதையொட்டி பாகிஸ்தான் தொடர்பான அணுகுமுறைகளில் அமெரிக்கா- கனடா மேற்குலக நாடுகளின் பார்வை பெரும் மாற்றத்திற்குள்ளாகி இருக்கிறது.
குறிப்பாக தீவிரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் டிரம்ப். “அமெரிக்காவுடன் பல்வேறு வகைகளில் பாகிஸ்தான் அளித்துவரும் ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்ட டிரம்ப், பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டு தலைவர்களுடனான உண்மையான உறவு தற்போதுதான் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மீது டிரம்ப் காட்டியுள்ள புதிய பாசம் இந்தியாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டொனால்ட் டிரம்ப்புக்கு இன்னொரு கட்டிப்புடி வைத்தியம் செய்யுங்கள் என பிரதமர் மோடியை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க பயணம் சென்றிருந்த பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கட்டித் தழுவி வாழ்த்து தெரிவிக்கும் படங்கள் வெளியாகின. இதை வைத்து பாகிஸ்தான் தொடர்பான அமெரிக்க மனப்போக்கு மாறுவதை மனதில் வைத்து டிரம்புக்கு மோடி இன்னொரு கட்டிப்பிடி வைத்தியம் செய்ய வேண்டும் என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் குர்தாஸ்பூர் :பாஜகவின் கோட்டையை கைப்பற்றிய காங்கிரஸ்…!

நஜீப் காணாமல் போய் ஒரு வருடம் ஆகிவிட்டது!

பஞ்சாப் குர்தாஸ்பூர் :பாஜகவின் கோட்டையை கைப்பற்றிய காங்கிரஸ்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*