எது வளர்ச்சி ? – மோடியிடம் கேளுங்கள் – 1

டிரம்புக்கு மோடி கட்டிப்பிடி வைத்தியம் செய்ய வேண்டும்:ராகுல் கிண்டல்…!

”எத்தனை நாட்கள், நீங்களும், உங்கள் முட்டாள் பாஸும்” ஸ்வேதா கோதாரிக்கு உதயகுமார்…!

ரிபப்ளிக் சேனலில் நடக்கும் அநியாயங்கள் : ஸ்வேதா கோதாரி

பன்னீருக்கு போட்டியாக எடப்பாடிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு…!

சபரிமலையில் பெண்கள்:“செக்ஸ் டூரிசமாக மாற்ற அனுமதியோம்” -தேவசம் போர்ட்…!

“இந்தியாவில் நிறைய வளங்கள் இருந்தாலும், சில மாநிலங்களின் ஆட்சியில் குறைபாடுகள் இருப்பதால் தான் நாம் பின் தங்கி இருக்கிறோம்” என பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று  ராஷ்ட்ரபதி பவனில் நடந்த ஆளுநர்களுக்கான கருத்தரங்களில் பேசிய நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

நல்ல ஆட்சி இருக்கும் மாநிலங்களில் ஏழை மக்களுக்கு பலனளிக்கும் திட்டங்கள் பல வெற்றிகரமாக நடக்கின்றன எனப் பேசிய மோடி, ஆளுநர்கள் ‘ஏக் பாரத், ஸ்ரெஸ்தா பாரத்’ போன்ற திட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

குஜராத், உத்திரகாண்ட், ராஜஸ்தான், குஜராத், சட்டீஸ்கர்,மத்திய பிரதேசம், அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீர்,அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர்,மஹாராஸ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், சிக்கிம்,பீஹார் மற்றும் கோவா ஆகிய 18 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது பாஜக. இதில் 6 மாநிலங்களில் கூட்டணியாகவும் மற்ற மாநிலங்களில் தனித்தும் ஆட்சி செய்கிறது.

இந்த வருடம் வெளியாகியிருக்கும் எகானாமிக் சர்வே 2016-2017-ன் முடிவுகளின் படி சட்டீஸ்கர்,ஜார்க்கண்ட்,மணிப்பூர்,அருணாச்சல பிரதேசம், பீஹார், ஒடிசா, அஸ்ஸாம், மத்திய பிரதேசம் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்கள் அதிகமாக வறுமை நிலவும் மாநிலங்களில் முதலிடங்களில் இருக்கின்றன. இவற்றில் ஒடிசாவை தவிர அத்தனை மாநிலங்களும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள்.

மேலும், தேசிய குடும்ப ஆரோக்கிய சர்வே ஒன்றின் முடிவுகள், இந்தியாவிலேயே அதிகளவு குழந்தைகள் வளர்ச்சி குன்றி இருக்கும் மாநிலமாக இருப்பது பீஹார் என்கிறது.அடுத்தடுத்த இடங்களில் உத்திரபிரதேசம்,ஜார்க்கண்ட், மேஹாலயா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்கள் வருகின்றன. இந்த பட்டியலில் அதிகம் இடம் பெறுவதும் பாஜக ஆளும் மாநிலங்கள் தான்.

தென் இந்தியாவை எடுத்துக் கொண்டால், பாஜக ஆட்சி செய்திடாத, திராவிட இயக்கங்கள் அல்லது இடது சாரி இயக்கங்களால் ஆளப்பட்ட மாநிலங்கள் – உதாரணமாக தமிழ்நாடும், கேரளாவும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது நல்ல வளர்ச்சி அடைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் வழங்கப்படும் கல்வியும் தரமும், கேரளாவில் இருக்கும் கல்வி அறிவு விகிதமுமே இதற்கு சாட்சி.

இப்படி பாஜக ஆளும் மாநிலங்களே வளர்ச்சியடையாமல் வறுமையாலும், ஆரோக்கிய குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மோடி எந்த மாநிலங்களை பின் தங்கிய மாநிலங்கள் எனச் சொல்கிறார் என்பது பெரும் கேள்விக்குறியாக  இருக்கிறது. இது மோடி தன் கட்சியையே சுய-விமர்சனம் செய்யும் யுக்தியா என்பது தெரியவில்லை. இந்நிலையில், 2022-ல் பீஹார் நல்ல வளர்ச்சியடைந்து விடும் என்றொரு அறிக்கை விட்டிருக்கிறார் பிரதமர் மோடி. இதன் வழியாக, மோடிக்கு எது வளர்ச்சி,எது முன்னேற்றம் எனத் தெரியவில்லை என எடுத்துக் கொள்ளலாமா?

முக்கிய செய்திகள்

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆருஷியின் பெற்றோர்?

நான் இந்து என்பதவால் இந்துத்துவாவை எதிர்க்கிறேன்:நயன்தாரா சாஹல்

புகார் மனு:பன்னீரை அடுத்து மோடியை சந்திக்க இபிஎஸ் திட்டம்…!

’ஜெ’ வுக்கு பிடித்த பச்சை வெளியே:மோடியின் ‘காவி’ உள்ளே:மவுனமாக ஆமோதித்த பன்னீர்…!

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

சினிமாவுக்கு சிக்கல்:நடிகர்கள் சம்பளத்தை குறைப்பார்களா?#VIDEO

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*