‘தலித்’ ‘ஹரிஜன்’ ’கீழாளளர்’ போன்ற வார்த்தைகளை நீக்கியது கேரள அரசு…!

”எத்தனை நாட்கள், நீங்களும், உங்கள் முட்டாள் பாஸும்” ஸ்வேதா கோதாரிக்கு உதயகுமார்…!

பன்னீருக்கு போட்டியாக எடப்பாடிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு…!

வைரலாகும் தோனியின் லட்டு வீடியோ!

கேரளாவின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை  ‘தலித்’ மற்றும் ‘ஹரிஜன்’ ஆகிய வார்த்தைகளை அலுவலக ரீதியான எந்த  தொடர்பு உரையாடல்களிலும் பயன்படுத்தப் போவதில்லை என அறிவித்திருக்கிறது. கேரள அரசே இந்த வார்த்தைகள் பயன்பாட்டை பற்றி தங்களுடைய பல்வேறு துறைகளிடமும் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறது.

கேரள மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான சங்கத்தின் தலைவர் நீதிபதி பி.என்.வியஜகுமார் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பட்டியல் சமூகங்களை குறிக்கும் ‘கீழாளர்’ எனும் வார்த்தையையும் பயன்படுத்தவும் அரசு தடை விதித்திருப்பதாக அறிவித்திருக்கிறது.

“ இந்த வார்த்தைகளின் பயன்பாட்டிற்கு எதிராக 2008 ஆம் ஆண்டில் மாநில அரசு சுற்றறிக்கை விட்டது. இந்த வார்த்தைகளின் பயன்பாடு ஒரு தேசம் எனும் உணர்வை அழித்து விடும்” என விஜயகுமார் சொல்லியிருக்கிறார்.

சில தலித் ஆர்வலர்கள் இந்த முடிவை வரவேற்கவில்லை.  “ தலித் எனும் வார்த்தை தாங்கள் ஒரு அரசியல் குழு என்பதை அடையாளப்படுத்திக் கொள்ள தலித்துக்களால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. பிறகு, இந்த வார்த்தைகளை ஹரிஜன், கிரிஜன் போன்ற வார்த்தைகளோடு சேர்த்தார்கள். அதை தலித்துக்கள், அரசியல் ரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும் மறுத்தார்கள். இதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது” என எழுத்தாளர் ஏ.எஸ்.அஜித் குமார் டெக்கான் கிரானிக்கலுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

மேலும், டைம்ஸ் ஆஃப் நவ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த ஆர்வலர் வி.பி.அஜய் குமார், “ எந்த மத அடையாளமும் இல்லாமல் தனித்து நிற்கும் வார்த்தை ‘தலித்’. மஹாத்மா ஃபூலே, அம்பேத்கர் ஆகியோர் அந்த வார்த்தையை பயன்படுத்தினர். தலித் என்றால் எங்களுக்கு பெருமை தான், அவமானம் கிடையாது. ஆனால், காந்திஜி சொன்ன ஹரிஜன் எனும் வார்த்தை தலித்துக்களால் நிராகரிக்கப்பட்டது” என்று சொல்லியிருக்கிறார்.

தலித் என்ற மாராட்டிய மொழி  சொல் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையொட்டி அரசியல் தளத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சொல்லாக உள்ளது. தமிழில் அதை “நொறுக்கப்பட்டவர்கள்” என்கிற புரிதலில் எடுத்துக் கொள்ளாலாம். ஹரிசன் என்ற வார்த்தையையும் தலித்  என்ற சொல்லையும் ஒரே பொருள் புரிந்து கொள்ள முடியாது.

நஜீப் காணாமல் போய் ஒரு வருடம் ஆகிவிட்டது!

சபரிமலையில் பெண்கள்:“செக்ஸ் டூரிசமாக மாற்ற அனுமதியோம்” -தேவசம் போர்ட்…!

பஞ்சாப் குர்தாஸ்பூர் :பாஜகவின் கோட்டையை கைப்பற்றிய காங்கிரஸ்…!

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*