இந்தியை திணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு…!

தினகரன் விவகாரம் :மேலும் சிதறும் அதிமுக…விரைவில் தியானம்…!

ஒபிஎஸ்-இபிஎஸ் குழுவால் ஏன் அடக்க முடியவில்லை தினகரனை?

ஒபிஎஸ் -இபிஎஸ்:மோடி போடும் மதிப்பெண்…!

ஸ்ட்ரெச்சரில் குப்பை அள்ளும் மருத்துவமனை # VIDEO

மெர்சல் டிக்கெட்டை 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யும் தளபதியின் தம்பிகள்…!
பாஜகவின் பொம்மை அரசாக இயங்கும் எடப்பாடி பழனிசாமி அரசு மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்ய விரும்புகிற அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த திட்டங்களை செயல்படுத்தும் தமிழக அரசு காவி நிறத்திற்கும் மாறி வருகிறது. இதுவரை தமிழகத்தில் கடை பிடிக்கப்பட்டு வந்த தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை கைவிடப்பட்டு மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு இந்தியை திணிக்கிறது என்ற குற்றச்சாட்டு காரணாமாக பல மாநிலங்கள் மாநில மொழிகளில் கல்வி பயில மக்களை ஊக்குவிக்கிறது. மேற்குவங்கம், கேரளம், ஆந்திரம் என பல மாநிலங்கள் தாய் மொழிக் கல்விக்கு முக்கியத்தும் கொடுத்து மாநில மொழிகளை வளர்க்கும் நிலையில் தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசோ இந்தியை வரும் கல்வி ஆண்டில் இருந்து கட்டாயமாக்க முடிவு செய்திருக்கிறது. ஆனால் இதற்கு தமிழகத்தில் திமுகவைத் தவிற வேறு இயக்கங்களோ தமிழ் தேசிய குழுக்களோ தங்கள் எதிர்ப்பை இன்னும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*