சசிகலாவை முதல்வராக விடாமல் ஏன் தடுத்தார் வித்யாசாகர் ராவ்- நூலில் தகவல்…!

மைனாரிட்டி எடப்பாடி பழனிசாமி அரசை பாதுகாக்கும் ஆளுநர்!

கவர்னர் வித்யாசாகர் நடத்திய 5 ஜனநாயக படுகொலைகள் எவை?

அதிமுக:தலைவலியை ஏற்படுத்திய அந்த ஐந்தாவது தீர்மானம்…!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்தார் சீமான்…!

பனாமா ஊழலை வெளிச்சமிட்ட ஊடகவியலாளர் கொலை!

தமிழகத்தில் சுமார் 12 மாதங்கள் தற்காலிக பொறுப்பு ஆளுநராக இருந்தவர் வித்யாசாகர் ராவ். இவரது நடவடிக்கைகள் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக இருந்ததாக பரவலாக தமிழகத்தில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலாளராக தெரிவான பிறகு அவரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வராக தெரிவு செய்தார்கள். அவர்களின் ஒப்புதல் கடிதத்துடன் தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு கடிதம் கொடுத்தும் கூட ஆளுநர் சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்கவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரட்டும் என ஆளுநர் காத்திருந்தார். ஆனால் அந்த காலதாமதம் கூவத்தூர் விடுதியை உற்பத்தி செய்தது. பின்னர் எடப்பாடியை சசிகலா முதல்வராக்கி விட்டுச் சிறை சென்றார்.
இந்நிலையில், தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ‘Those Eventful Days’ என்ற நூலை எழுதியுள்ளார். ‘அந்த நிகழ்வுகள் நடந்த நாட்கள்’ எனும் தலைப்பிடப்பட்ட அந்நூல் நேற்று சென்னை ராஷ்டிரபதி பவனில் வெளியிடப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இந்நூலை வெளியிட்டார்.
மொத்தம் 12 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூலின் சில அத்தியாயங்களில் ஜெயலலிதா பற்றியும் குறிப்பிட்டுள்ளார் கவர்னர். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு டிசம்பர் 31-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக பதவி எற்ற சசிகலா பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார். ஆனால் கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை. சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த ஆளுநர் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வர இருப்பதால் அதுவரை காத்திருக்க முடிவு செய்தார்.சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் என்னும் நிலையில் சசிகலாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கவில்லை என்று ஆளுநர் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

அதிமுகவின் இன்றைய நிலைக்கு காரணம் யார் தெரியுமா இங்கே க்ளிக் பண்ணுங்க…!
சசிகலாவை பதவியேற்பு மட்டுமல்ல ஆளுநர் வித்யாசாகர் ஒட்டு மொத்த நடவடிக்கைகளுமே பாஜக மேலிடத்தின் கண் அசைவுகளுக்கு ஏற்பத்தான் இருந்தது. பன்னீரை அமைச்சரவையை வழி நடத்துமாறு உத்தரவிட்டது. அவரை ஜெயலலிதா இறந்த அன்றே அவசரமாக முதல்வராக்கியது. திமுக விடுத்த அனைத்து கோரிக்கைகளையும் கண்டு கொள்ளமல் விட்டது. எடப்பாடி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு வரவிடாமல் பாதுகாத்தது என அவர் தமிழகத்தில் நிகழ்த்தியது அத்தனையுமே ஜனநாயக படுகொலைகள்தான்.

தொடர்புடைய முக்கிய செய்திகள்

அதிமுக இணைப்பு நாடகம்:எப்படி இருக்கும் க்ளைமாக்ஸ்…! video

இணைந்தன அதிமுக அணிகள் : எத்தனை நாளுக்கு இந்த நாடகம்?

மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் ஈபிஎஸ் – ஓபிஎஸ்!

ஸ்டாலின் கவர்னருக்கு கடிதம்!

தினகரன் விவகாரம் :மேலும் சிதறும் அதிமுக…விரைவில் தியானம்…!

ஒபிஎஸ்-இபிஎஸ் குழுவால் ஏன் அடக்க முடியவில்லை தினகரனை?

ஒபிஎஸ் -இபிஎஸ்:மோடி போடும் மதிப்பெண்…!

ஸ்ட்ரெச்சரில் குப்பை அள்ளும் மருத்துவமனை # VIDEO

மெர்சல் டிக்கெட்டை 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யும் தளபதியின் தம்பிகள்…!

”எத்தனை நாட்கள், நீங்களும், உங்கள் முட்டாள் பாஸும்” ஸ்வேதா கோதாரிக்கு உதயகுமார்…!

ரிபப்ளிக் சேனலில் நடக்கும் அநியாயங்கள் : ஸ்வேதா கோதாரி

பன்னீருக்கு போட்டியாக எடப்பாடிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு…!

பஞ்சாப் குர்தாஸ்பூர் :பாஜகவின் கோட்டையை கைப்பற்றிய காங்கிரஸ்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*