பணிந்தார் இபிஎஸ் :பன்னீருக்கும் கொடியேற்றும் வாய்ப்பு…!

தினகரன் விவகாரம் :மேலும் சிதறும் அதிமுக…விரைவில் தியானம்…!

ஒபிஎஸ்-இபிஎஸ் குழுவால் ஏன் அடக்க முடியவில்லை தினகரனை?

ஒபிஎஸ் -இபிஎஸ்:மோடி போடும் மதிப்பெண்…!

அதிமுகவின் 46-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கும் தலைமைக் கழகத்தில் கொடியேற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் இருந்தாலும் அதிகாரம் அனைத்தும் பழனிசாமி கையில்தான் இருந்து வருகிறது.காரணம் கட்சியின் பெரும்பான்மை பிரமுகர்கள் எடப்பாடி கட்டுப்பாட்டில் இருகிறார்கள். தலைமைச் செயலகத்திற்குள் தினகரன் அணி நுழைந்து விடக் கூடாது என்று 24 மணி நேர போலீஸ் படை பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில் பன்னீர் அணியினரும் தலைமைச் செயலகத்தில் செல்வாக்குச் செலுத்தக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் பழனிசாமி தன் நம்பிக்கைக்குரிய விசுவாசிகளை ஷிப்ட் முறையில் அதிமுக தலைமைக் கழகத்தில் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  :-

17.10.2017 அன்று 46-ஆவது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 3 நாட்கள் அதிமுக கழக 46-வது ஆண்டு தொடக்க நாள் பொதுக்கூட்டங்கள் , கலை நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” அதில் ஒபிஎஸ் -இபிஎஸ் நிகழ்ச்சிகள் என்ன என்பது பற்றி எந்த விபரமும் இல்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழகத்தில் கொடியேற்றுவார் என்று முடிவெடுத்திருந்தார்கள். இப்போது பழனிசாமிக்குப் பிறகு ஓ,பன்னீர்செல்வமும் கொடியேற்றுவார் என்று பன்னீருக்கும் கொடியேற்றும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

டெல்லி சென்று வந்த பின்னர்  இரு தரப்பு அணிகளுக்கும் இடையிலான மோதல் கூர்மையடையும் நிலையில் எடப்பாடி பழனிசாமி பன்னீர் தரப்பு கடந்த இரு நாட்களாக பல விஷயங்களையும் பேசி இந்தகொடியேற்றும் நிகழ்வை முடிவு செய்திருக்கிறார்கள்.

2015-ஆம் ஆண்டு  அதிமுக உருவான தினம் அன்று அதிமுக தலைமைக் கழகத்தில் ஜெயலலிதா கொடியேற்றிய நிலையில் 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்ததால் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் விழா எளிமையாக நடந்தது. ஜெயலலிதா இறந்து விட்ட நிலையில் ஒபிஎஸ்-இபிஎஸ்-தினகரன் என மூன்று அணிகளாக அதிமுகவுக்குள் போட்டி நடக்கிறது.

முக்கிய செய்திகள்

”எத்தனை நாட்கள், நீங்களும், உங்கள் முட்டாள் பாஸும்” ஸ்வேதா கோதாரிக்கு உதயகுமார்…!

ரிபப்ளிக் சேனலில் நடக்கும் அநியாயங்கள் : ஸ்வேதா கோதாரி

பன்னீருக்கு போட்டியாக எடப்பாடிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு…!

பஞ்சாப் குர்தாஸ்பூர் :பாஜகவின் கோட்டையை கைப்பற்றிய காங்கிரஸ்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*