பனாமா ஊழலை வெளிச்சமிட்ட ஊடகவியலாளர் கொலை!

சசிகலாவை முதல்வராக விடாமல் ஏன் தடுத்தார் வித்யாசாகர் ராவ்- நூலில் தகவல்…!

பணிந்தார் இபிஎஸ் :பன்னீருக்கும் கொடியேற்றும் வாய்ப்பு…!

தினகரன் விவகாரம் :மேலும் சிதறும் அதிமுக…விரைவில் தியானம்…!

ஒபிஎஸ்-இபிஎஸ் குழுவால் ஏன் அடக்க முடியவில்லை தினகரனை?

இந்தியை திணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு…!

பனாமா ஆவணங்கள் ஊழலை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் கலீசியா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். 53 வயதான டஃப்னே கருவானா கலீசியாவின் காரின் மீது நேற்று சக்தி வாய்ந்த வெடி குண்டு வீசப்பட்டிருக்கிறது. அவருடைய உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

மால்டாவை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளரான  கலீசியா, வெளிநாடுகளில் நடக்கும் வரி ஏய்ப்பிற்கும் தன் தீவு நாட்டிற்கும் இருக்கும் தொடர்புகளை பனாமா ஆவணங்கள் வழியே அம்பலப்படுத்தினார். நேற்று மதியம் 2.35 மணிக்கு ஒரு கட்டுரையை தன் வலைப்பக்கத்தில் பதிவேற்றிவிட்டு , மோஸ்டாவில் இருக்கும் தன் வீட்டில் இருந்து காரில் வெளியே வந்த போது , அவர் காரின் மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது. குண்டு சப்தத்தை கேட்ட அவருடைய வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்திருக்கிறார்.

மால்டாவின் பிரதமர் ஜோசஃப் முஸ்கட்டின் மனைவி மற்றும் அவருடைய அரசின் உறுப்பினர்கள் பலர் பனாமாவில் பல நிறுவனங்கள் வைத்திருப்பதை 2016ல் எக்ஸ்போஸ் செய்தார் கலீசியா. இந்த குற்றச்சாட்டுக்களை ஜோசஃப் முஸ்கட் மறுத்து வந்தார். இந்நிலையில், கலீசியாவின் மரணம் பற்றி பேசிய முஸ்கட், “ கருத்துச் சுதந்திரம் மீது செய்யப்பட்டிருக்கும் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் இது” என்று சொல்லியிருக்கிறார்.

எதிர்கட்சி தலைவர் ஏட்ரியன் டிலியா, “ இதொரு அரசியல் படுகொலை” என்று விமர்சித்திருக்கிறார். கலீசியாவிற்கு கணவரும், மூன்று மகன்களும் இருக்கின்றனர்.அவருடைய மகன் மேத்யூ,பனாமா ஆவணங்கள் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக புலிட்சர் பரிசை வென்ற இண்டர்நேஷனல் கன்சோர்டியம் ஆஃப் இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட்ஸ் அமைப்பில் இருந்தவர். ஏறத்தாழ பதினைந்து நாட்களுக்கு முன்னர் தான் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் கலீசியா.

முக்கிய செய்திகள்

”எத்தனை நாட்கள், நீங்களும், உங்கள் முட்டாள் பாஸும்” ஸ்வேதா கோதாரிக்கு உதயகுமார்…!

ரிபப்ளிக் சேனலில் நடக்கும் அநியாயங்கள் : ஸ்வேதா கோதாரி

பன்னீருக்கு போட்டியாக எடப்பாடிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு…!

பஞ்சாப் குர்தாஸ்பூர் :பாஜகவின் கோட்டையை கைப்பற்றிய காங்கிரஸ்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*