சர்ச்சைக்குள்ளான கனடா பிரதமரின் தீபாவளி வாழ்த்து!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ‘தீபாவளி வாழ்த்து’ தெரிவித்தது சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.

கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா?!அவ்வளவு திறமை, மனிதம், நேர்மை,அழகு நிறைந்த ஒரு மனிதரை பிரதமராக அடைந்திருக்கும் கனடா மக்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிரது. ஆனால், சில அடிப்படைவாதிகளுக்கு ஜஸ்டின் ட்ரூடோவை சகித்துக் கொள்ளவே முடியாது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

 

இந்தியர்கள் பலர் வசிக்கும் கனடாவில் தீபாவளி கொண்டாட்டங்கள் நெருங்கியிருக்கிறது.இந்நிலையில், ஷெர்வானி ஒன்றை அணிந்து கொண்டு விளக்கேற்றும் படம் ஒன்றை வெளியிட்ட ஜஸ்டின், அதில் ‘தீபாவளி முபாரக்’ என தீபாவளி வாழ்த்து தெரிவித்திருந்தார். முபாரக் எனும் அரபு வார்த்தைக்கு ஆசீர்வாதங்கள் என்று பொருள்.

 

‘தீபாவளி’ எனும் வார்த்தையோடு எதற்கு அரபு வார்த்தையான ‘முபாரக்கை’ இணைக்கிறீர்கள் என ஒரு இந்தியாவை சேர்ந்த பழைமைவாத கும்பல் அவரோடு சண்டைக்கு போய் கொண்டிருக்கிறது. ஆனால், மறுபக்கம், மக்கள் , ஜஸ்டினுக்கு திரும்பி வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*