நிலவேம்பு பீதியை பரப்பலாமா?

#MersalVsModi : டுவிட்டரில் பாஜகவை தெறிக்க விட்ட டிரெண்டிங்…!

மது விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!’

முரசொலி அலுவலகம் வந்தார் கருணாநிதி..!
நரகாசூரா…..வரலாம்… வா.. வா.. ஆல்பம் #VIDEO

’மெர்சல்’_ விரைவில் விஜய் மீது வருமானவரி ரெய்ட்?

இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழக மருத்துவத்துறை முன்னேறியிருந்தாலும் கூட இன்னும் அது தன்னிறைவான ஒரு இலக்கை அடையவில்லை. மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகைகளுக்கு ஏற்ப படுக்கைகள் இல்லை.படுக்கைகள் இருந்தால் ஒரு படுக்கைக்கு ஒரு மருத்துவ உதவியாளர் என்ற பணியாளர் பற்றாக்குறை என பலவிதமான குறைபாடுகளுடன் தான் நமது மருத்துவத்துறை உள்ளது.
சிக்கன்குன்யா காய்ச்சல் வந்த போது ஆங்கில மருத்துவம் கை கொடுத்ததை விட நிலவேம்பு குடிநீர்தான் கை கொடுத்தது. விஷக்காய்ச்சல், சாதாரண ஜூரம் என அனைத்து விதமான காய்ச்சல்களுக்கும் நிலவேம்புக் கசாயம் ஒரு நிவாரணியாக செயல்படுகிறது. ஆங்கில மருத்துவத்தை பொறுத்தவரை டெங்கு நோய்க்கு மருந்தில்லை என்கிறார்கள். வளர்ச்சியடையாத நமது மருத்துவத்துறை டெங்கு நோய் தாக்குதலுக்கு ஒருவர் ஆளாகிறார் என்பதை கண்டறியவே சில நாட்கள் ஆகி விடுகிறது. அதற்குள் அவரது வெள்ளையணுக்கள் குறைந்து விடுகிறது. டெங்கு நோய்க்கு இதுவரை நானூறுக்கும் அதிகமானவர்கள் இறந்து விட்டதாக கூறப்படும் நிலையில்,ஆனால் காய்ச்சல் கண்டவுடன் தொடர்ந்து மூன்று நாட்கள் நிலவேம்பு குடிநீரை அருந்தினால் ஒரளவு காய்ச்சல் கட்டுப்படுகிறது என்பதை அனுபவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நிலவேம்பு தயாரிக்க பயன்படும் 9 வகையான மூலிகைகளில் ஒன்று மலட்டுத்தன்மையை உருவாக்குவதாக பலரும் குற்றம் சுமத்துகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் இது பரவியதால் பலரும் நிலவேம்பு குடிக்கலாமா கூடாதா என்று குழப்பம் அடைந்தனர். டெங்கு நோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்து இல்லாத போது நமது பாரம்பரிய மருந்தான நிலவேம்பு குடீநீரை மக்களுக்கு பரிந்துரைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்.
அறிவியல் நிரூபணம்?
நிலவேம்பு டெங்குவை குணப்படுத்துகிறது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்து விட்டு மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது நடிகர் கமல் போன்றோரின் வாதம். உலக அளவில் ஆங்கில மருந்து கம்பெனிகள் நடத்தும் கார்ப்பரேட் கொள்ளையின் ஒரு அங்கமே உள்ளூர் மக்களின் மருத்துவ முறைகளை அதன் குறைந்த பட்ச நிவாரணங்களை நிராகரிப்பதும் அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க தடையாக இருப்பதுதான். நில வேம்பு மட்டுமல்ல நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் மஞ்சள் கூட ஒரு நோய்க்கொல்லி என்று ஆங்கில மருத்துவ அளவுகோல்களின் படி நிரூபிக்க முடியாது.
நிலவேம்பு குறித்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவிக்கிறவர்கள். டெங்கு போன்ற உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற மாற்று மருத்துவம் என்ன என்பது பற்றி பேசாத வரை நிலவேம்பு குறித்து இந்த டெங்கு அனர்த்தன நேரத்தில் பேசி மக்களிடம் பீதி பரப்பாமல் இருப்பது நல்லது.

வாட்டாள் நாகராஜ் எதிர்ப்பு:கர்நாடகத்தில் ‘மெர்சல்’ காட்சிகள் ரத்து…! VIDEO

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:ஒபிஎஸ்-இபிஎஸ் மோதல்…!

ஆதார் அட்டை இல்லாததால் பட்டினியால் உயிரிழந்த சிறுமி!

பிராமண குருக்களை திருமணம் செய்தால் 3 லட்சம் :தெலுங்கானா அரசு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*