பிராமண குருக்களை திருமணம் செய்தால் 3 லட்சம் :தெலுங்கானா அரசு

தாஜ்மகால் நீக்கம்:செங்கோட்டையை என்ன செய்வது?

அப்பல்லோ ஐ.சி.யூவில் இருந்து ஆளுநருக்கு கடிதம் எழுதினாரா ‘ஜெ’?

இந்தியாவில் கோடீஸ்வரக் கட்சி பாஜக:893 கோடிக்கு சொத்து…!

பிக் பாஸை விட அதிகம் பார்த்த நிகழ்ச்சி எது தெரியுமா?

இந்து ஆலயங்களில் வேலை செய்யும் குருக்களை கல்யாணம் செய்து கொண்டால் மூன்று லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தெலுங்கானா அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

பெண்களும்,பெண்களின் குடும்பத்தாரும் பணக்கார இளைஞர்களையே நாடி செல்வதால் கோவில்களில் வேலை செய்யும் பிராமண குருக்களுக்கு  திருமணம் ஆவது சிரமமாக இருப்பதால் அதை உடனே சரி செய்ய வேண்டும் என்பதுதான் தெலங்கானா அரசின் இந்த திட்டத்திற்கு கூறியிருக்கும் காரணம்.மூன்று லட்ச ரூபாய் கொடுப்பது மட்டுமின்றி, திருமண செலவுக்காக தம்பதியினருக்கு ஒரு லட்ச ரூபாய் ஃபிக்ஸட் டெபாசிட் செய்யப்படும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.

“முன்பு போல இல்லாமல், பெண்கள் பேராசையோடு மாப்பிள்ளைகள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள் கூட வேலை உறுதியாக இல்லாததால் கல்யாணம் நடக்காமல் இருக்கிறார்கள். சமூகத்தில் பெரிய மதிப்பு இல்லாததால் ஆலயங்களில் வேலை செய்யும் பிராமண குருக்களுக்கு எல்லாம் பெண் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது” என தெலுங்கான பிராமின் சம்க்‌ஷீமா பரிஷத்தின் தலைவர் கே வி ரமணாச்சாரி சொல்லியிருக்கிறார். இவர் தெலுங்கானா முதலவரின் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது யோசனையில்தான் இந்த திட்டத்தை தெலங்கானா அரசு கொண்டு  வந்துள்ளதாக கூறப்படுகிறது.

பொருளாதாரம் வீழ்ச்சி:100 அடி உயரத்தில் மோடிக்கு சிலை…!

லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு 50 பேர் பலி: சுட்டவர் பற்றி புதிய தகவல்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியை 6.5 கோடி பேர் பார்த்தது உண்மையா?

கௌரி லங்கேஷ் படுகொலை:தேசிய விருதுகளை திருப்பி கொடுக்கும் பிரகாஷ் ராஜ்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*