’மெர்சல்’ மறு தணிக்கை கூடாது:கமல்…!


மோடி அம்மா டான்ஸுனு தப்பா நினைச்சுட்டேன்:கிரன் பேடி #video

வாட்ஸ்சப் வைரல்” “ஜி.எஸ்.டினா என்னங்கண்ணா?

மிரட்டப்படுகிறாரா விஜய்? 

ஒரு முறை சென்சார் செய்யப்பட்ட மெர்சல் படத்தை மீண்டும் ஒரு முறை சென்சார் செய்ய வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.மெரசல் படத்தில் வரும் ஜி.எஸ்.டி வரி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் என்று பாஜகவினர் குரல் கொடுத்து வரும் நிலையில், படக்குழுவால் எந்த டயலாக்கையும் நீக்க முடியாது என்பதே யதார்த்தம் எனும் நிலையில் படத்தை தடை செய்ய வேண்டும் அல்லது மறு தணிக்கை செய்ய வேண்டும் என்று பாஜகவினர் குறி வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்:-
“ விஜயின் மெர்சல் திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டாம். மெர்சலுக்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்யக்கூடாது. விமர்சனங்களை அடக்க நினைக்காதீர்கள். கருத்துக்கள் பேசப்பட்டால் தான் இந்தியா ஒளிரும். விமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். விமர்சிப்போரை மவுனமாக்கக்கூடாது” என தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அவசரப்பட்டு ஆதரித்ததற்காக சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்புக்கேட்டது குறிப்பிடத்தக்கது.

வாட்டாள் நாகராஜ் எதிர்ப்பு:கர்நாடகத்தில் ‘மெர்சல்’ காட்சிகள் ரத்து…! VIDEO

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:ஒபிஎஸ்-இபிஎஸ் மோதல்…!

ஆதார் அட்டை இல்லாததால் பட்டினியால் உயிரிழந்த சிறுமி!

பிராமண குருக்களை திருமணம் செய்தால் 3 லட்சம் :தெலுங்கானா அரசு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*