விஜய் மற்றும் ‘மெர்சல்’ படக்குழுவுக்கு வாழ்த்துகள்: விஷால்

“இயக்குநர் ஷங்கர் ஊதியம் தரவில்லை” -உதவி இயக்குநரின் வாக்குமூலம்…! #VIDEO

மெர்சல்: பாஜக நீக்க சொன்ன வீடியோ உள்ளே….!

விஜய் நடித்து அட்லி இயக்கத்தில் உருவான ‘மெர்சல்’ திரைப்படத்தில் மத்திய பாஜக அரசாங்கத்தின் முறைகேடு பற்றி விமர்சித்ததால், பாஜக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த காட்சியை நீக்க வேண்டும் என பாஜக-வினர் வலியுறுத்தினார்கள். நடிகர் விஜய்க்கு மதச்சாயம் பூசி ‘ஜோசப் விஜய்’ என பேசியது பாஜக தரப்பு. ஆனால் மக்கள் அனைவரும் படக்குழுவுக்கு ஆதரவு தெரிவித்தனர். எனினும் ‘மெர்சல்’ படக்குழு அந்த காட்சியை நீக்க ஒப்புக்கொண்டனர். இந்த படத்தில் மத்திய அரசாங்கத்தை விமர்சிக்கும் காட்சியை தைரியமாக வைத்ததற்கு பல திரைப்பிரபலங்கள் பாராட்டு தெரிவித்த நிலையில், விஷால் தற்போது வாழ்த்துகள் கூறியுள்ளார்.

#MersalVsModi : டுவிட்டரில் பாஜகவை தெறிக்க விட்ட டிரெண்டிங்…!

இதுபற்றி அவர், “சமூக அவலங்கள் பற்றிய கருத்தினை மக்களிடம் கொண்டு சேர்த்தற்காக விஜய், அட்லி மற்றும் மெர்சல் குழுவுக்கு வாழ்த்துக்கள். ஹாலிவுட் திரைப்படங்களில் அமெரிக்க ஜனாதிபதியை கலாய்க்கிறார்கள், நாம் மட்டுமே கருத்து சுதந்திரத்தை இழக்க வேண்டியுள்ளது. ஒருமுறை தனிக்கை செய்யப்பட்ட படத்தின் காட்சிகளை நீக்க சொல்லி ஒரு அரசியல் கட்சி கேட்பது தவறு, இதனால் தனிக்கைக் குழு எதற்கு என்ற கேள்வி எழுகிறது” என தெரிவித்துள்ளார்.

பராசக்தியும்- மெர்சலும் :சிதம்பரம் டுவிட்…!

2.0: ரஜினிக்கு பதிலாக ஆமிர் கான்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*