அதிமுகவின் ஒருங்கிணைப்புக் குழு அமைக்க முடியாது ஏன்?

’மெர்சல்’ காட்டி எடப்பாடி கூட்டத்தைக் கலைத்த தினகரன் அணி…!

கந்து வட்டி எனும் “Organized Crime”…!

தாஜ்மஹாலில் சிவ பூஜை நடத்திய இந்து அமைப்பினர்…!

மோடி அதிமுகவின் மீட்பரா?
பணிந்தது மெர்சல் குழு:பாஜகவிடம் மன்னிப்புக் கோரி கடிதம்…!

ஸ்டாலின் எழுச்சிப்பயணம் மெர்சலான ஒபிஎஸ்-இபிஎஸ்…!

’மெர்சல்’ கமலுக்காக ஒரு ஸ்பெஷல் ஷோ..!

“இடது அடிப்படைவாதிகள்” : நீயா நானா-ஆன்டனி…!

இணைப்பு நடவடிக்கை முடிந்து இரு மாதங்கள் ஆன் பிறகும் ஒப்புக்கொண்ட பதவிகள் எதையும் வழங்காத நிலையில் ஒபிஎஸ் அணிக்குள் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
இரு அணிகளும் இணைந்த பின்னர் பொதுக்குழுவில் ஒப்புக்கொண்ட ஒருங்கிணைப்புக் குழு நியமிக்கப்படவில்லை. காரணம் எடப்பாடி அணியில் 6 பேரும், பன்னீர் அணியில் 5 பேரையும் வைத்து கட்சியை வழி நடத்தும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கலாம் என்று முடிவெடுத்த நிலையில் இரு அணிகளையும் சேர்ந்த பலரும் அந்த ஒருங்கிணைப்புக் குழுவுக்குள் வர ஆசைப்படுகிறார்கள். காரணம் நாளை அதிக விலையுள்ள கட்சி பதவிகளாக இருக்கப் போவது ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களுக்குத்தான். காரணம் பொதுச் செயலாளருக்கு உள்ள மொத்த அதிகாரத்தையும் இந்த குழுவுக்கு மாற்றி விடுவார்கள்.
அதனால் எடப்பாடி தன் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களை வைத்து குழுவை நிரப்பி விடலாம் என நினைத்தார். ஆனால் நிலைமை அவருக்கு சாதகமாக இல்லை. யார் ஸ்லீப்பர் செல் அது எப்போது வெடிக்கும் என்பதை தெரியாமல் குழு உறுப்பினர்களை தெரிவு செய்ய முடியாமல் திணறுகிறார். இப்போதைக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் எண்ணிக்கையை 30 ஆக அதிகரிக்க யோசிக்கிறார்கள்.இரு அணிகளிலும் ஆளுக்கு 15 பேர் வீதம் பதவியை பங்கிட்டுக் கொள்ளலாம் என்பது யோசனை.
ஒபிஎஸ் அணியோ மொத்தமாக அதிருப்தியில் இருக்கிறது. அதிமுகவிலும் ஆட்சியிலும் தலையெடுக்க முடியாமல் எடப்பாடி அணி இரும்பு வேலிகளை அமைத்திருக்கிறது. இந்த வேலிகளை உடைத்து தன்னையும் ஒரு தலைவராக நிலை நிறுத்திக் கொள்ள டெல்லியின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார் பன்னீர்.
இந்த முரண்பாடுகளைத்தான் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், “கட்சியில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. எல்லாம் சீக்கிரம் சரியாகி கமிட்டி அமைக்கப்படும் என நம்புகிறோம்” என்று ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கூறினார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பன்னீர்செல்வம் மதுசூதனனை நிறுத்த நினைக்கிறார். அமைச்சர் ஜெயக்குமாரோ தன் ஆதரவாளர் ஒருவருக்கு தொகுதி வேண்டும் என முதல்வரிடம் கேட்கிறார். ஆக மொத்தம் ஆர்.கே.நகர் தொகுதி யாருக்கு என்பதை முடிவு செய்யவே ஒருங்கிணைப்புக் குழு அவசரமாக அமைக்கப்பட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது அதிமுக…!

முக்கிய செய்திகள்

மது விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!’

வாட்ஸ்சப் வைரல்” “ஜி.எஸ்.டினா என்னங்கண்ணா?
’மெர்சல்’ மறு தணிக்கை கூடாது:கமல்…!

ஆதார் அட்டை இல்லாததால் பட்டினியால் உயிரிழந்த சிறுமி!

பிராமண குருக்களை திருமணம் செய்தால் 3 லட்சம் :தெலுங்கானா அரசு

மிரட்டப்படுகிறாரா விஜய் :ஜி.எஸ்.டி வசனங்கள் நீக்கம்?

ரஜினியின் 2.0 பட உதவி இயக்குநருக்கு ஊதியம் இல்லை…

மத அரசியல் எதிர்ப்பு: சமூக வலைதளங்களில் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு

பராசக்தியும்- மெர்சலும் :சிதம்பரம் டுவிட்…!

#MersalVsModi : டுவிட்டரில் பாஜகவை தெறிக்க விட்ட டிரெண்டிங்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*