‘மெர்சல்’ புயலில் சிக்கி சின்னாபின்னமான பாஜக

 மத்திய அரசோடு இணக்கமாக இருக்கும் அதிமுக சாதித்ததுதான் என்ன?

நெஞ்சுவலி டெக்னிக்: கந்து வட்டி கொலையாளிகளை காப்பற்ற தீவிரம்..!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் ‘மெர்சல்’. இந்த படத்தில் மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி முறைகேடு மற்றும் இந்திய மருத்துவத்துறையில் உள்ள குறைபாடுகள் பற்றிய வசனம் இடம்பெற்றது. அதேபோல் கோவிலுக்கு பதிலாக மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற வசனத்தை விஜய் பேசியிருப்பார். மேற்கூறிய வசனங்கள் பாஜக-வினருக்கு உறுத்தலாக இருந்தது போல, அந்த வசனம் இடம்பெற்ற காட்சிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் மக்களின் ஆதரவு ‘மெர்சல்’ படக்குழுவின் பக்கம் இருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாஜக பிரமுகர் தமிழிசை ஒருபுறம் மருத்துவத்துறையை இந்தப் படம் தவறாக சித்தரிக்கிறது என கருத்து தெரிவிக்க, எச்.ராஜா வழக்கமான இந்துத்துவ பாஜக ஸ்டைலில் விஜய்க்கு மதச்சாயம் பூசத் துவங்கினார். ஜோசப் விஜய் என்று விஜய்யின் முழுப்பெயரை அடையாளப்படுத்தி கருத்துகளை பதிவு செய்தார். ஆனால் பாஜக-வினர் செயல்கள் எல்லாம் அவர்களுக்கு எதிராக திரும்பியது. சமூக வலைதளங்களில் அவர்களை கலாய்த்து மீம்ஸ், வீடியோக்கள் என வலம் வருகின்றன. பாஜக-வின் மீது தமிழக மக்களுக்கு உள்ள வெறுப்பை இந்த மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் பெறும் வரவேற்பை வைத்து அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாது விஜய்க்கு ஆதரவாக ‘தமிழர்களை சாதியாய் மதமாய் பிரிக்க முடியாது-#Iamjoseph’ என்ற வசனம் தாங்கிய புகைப்படத்தை பலரும் டிபியாக வைத்துள்ளனர். சாதாரணமான கமர்ஷியல் படமாக ஓடியிருக்க வேண்டிய ‘மெர்சல்’ திரைப்படத்தை இந்திய அளவில் மிகவும் பிரபலமாக்கிய பெருமை பாஜக-வையே சேரும்.

தாஜ்மஹாலில் சிவ பூஜை நடத்திய இந்து அமைப்பினர்…!

இதனை கலாய்க்கும் வகையில் பலூன் பட இயக்குனர் சினிஷ், “பலூன்.னு ஒரு படம் பண்ணி வச்சிருக்கேன். புரமோசனுக்கு காசு இல்ல. பாத்து எதாச்சும் பண்ணுங்க சார்” என்று எச்.ராஜாவுக்கு ட்விட் செய்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*