குஜராத்:தேர்தலை அறிவித்தது ஆணையம்..!

தமிழரசியல் முகநூல் பக்கத்தை லைக் பண்ணுங்க..!

தாஜ்மஹாலை எப்போது இடிப்பீர்கள்?: பிரகாஷ் ராஜ்

“எதுக்குல உயிரோட வாழ்ற”இசக்கி முத்துவை மிரட்டியதா போலீஸ்?…! AUDIO

கந்து வட்டி என்பது “Organized Crime”…!
பாஜகவுக்காக தேர்தலை அறிவிக்க தாமதிக்கிறது தேர்தல் ஆணையம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இன்று குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.
கடந்த இருபது ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக உள்ளது குஜராத் மாநிலம்.அது இந்திய பிரதமர் மோடியின் சொந்த மாநிலமும் ஆகும். அடுத்தடுத்து குஜராத் மாநிலத்தில் வெற்றிகளை குவித்த மோடி அந்த வெற்றிகளில் இருந்துதான் பாஜகவைக் கைப்பற்றினார்.
தனி மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சியை பிடித்த நிலையில், இப்போது குஜராத் மாநிலத்தில் அது வெல்வது கடினம் என்கிறார்கள் பலரும், தலித்துக்களின் வாக்கு வங்கியும், பாஜகவின் முதுகெலும்பான படேல்களின் வாக்குவங்கியும் பாஜக பக்கம் இல்லை. இதனால் தேர்தலை சில காலத்திற்கு தள்ளிப்போட நினைத்த பாஜக தேர்தல் கமிஷனுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
குஜராத் மழை வெள்ள சேதத்தை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தேர்தல் கமிஷன் கூறிய நிலையில் பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் பல ஆயிரம் கோடி அளவுக்கு அரசு திட்டங்களை அறிவித்தார். பட்டேல் சமூக தலைவராஜ ஹிர்த்திகை தங்கள் பக்கம் இழுக்க அவர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. ஆனாலும் அவர் பாஜக பக்கம் திரும்ப மறுத்து விட்ட நிலையில் அவரது குழுவில் உள்ள சிலரை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டது பாஜக. ஹிருத்திக் ராகுல்காந்தி பக்கம் சாய்ந்து விட்டார்.
இந்நிலையில்தான் இன்று டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஜோதி குஜராத் தேர்தலை அறிவித்தார்.
182 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.முதல் கட்டமாக 9 தொகுதிகளுக்கு டிசம்பர் 9 -ஆம் தேதியும், இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14 தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18 ந்தேதி நடைபெறும்” என அறிவித்தார் ஜோதி.

முக்கிய செய்திகள்

மத அரசியல் எதிர்ப்பு: சமூக வலைதளங்களில் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு

பராசக்தியும்- மெர்சலும் :சிதம்பரம் டுவிட்…!

#MersalVsModi : டுவிட்டரில் பாஜகவை தெறிக்க விட்ட டிரெண்டிங்…!

ஸ்டாலின் எழுச்சிப்பயணம் மெர்சலான ஒபிஎஸ்-இபிஎஸ்…!

விஜய் டி.விக்கு எதிராக பண்ருட்டி வேல்முருகன் போராட்டம் அறிவிப்பு…!

’மெர்சல்’ கமலுக்காக ஒரு ஸ்பெஷல் ஷோ..!

“இடது அடிப்படைவாதிகள்” : நீயா நானா-ஆன்டனி…!

கந்து வட்டி கொடுமை :நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பமே தீக்குளிப்பு:முழு விபரம்…!

மோடி அதிமுகவின் மீட்பரா?
பணிந்தது மெர்சல் குழு:பாஜகவிடம் மன்னிப்புக் கோரி கடிதம்…!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*