#Demonetisation நவ-8 கருப்பு தினம்…!

A large queue of people wait outside a bank to exchange Indian currency in the denominations of 1000 and 500 that have been declared to be of no value, in New Delhi, India, Friday, Nov. 11, 2016. Delivering one of India's biggest-ever economic upsets, Prime Minister Narendra Modi this week declared the bulk of Indian currency notes no longer held any value and told anyone holding those bills to take them to banks to deposit or exchange them. (AP Photo/Saurabh Das)

மத்திய அரசோடு இணக்கமாக இருக்கும் அதிமுக சாதித்ததுதான் என்ன?

கந்து வட்டி எனும் “Organized Crime”…!

பரோல் நீட்டிப்பு இல்லை:சிறை திரும்புகிறார் பேரறிவாளன்…!

நெஞ்சுவலி டெக்னிக்: கந்து வட்டி கொலையாளிகளை காப்பற்ற தீவிரம்..!

’மெர்சல்’ காட்டி எடப்பாடி கூட்டத்தைக் கலைத்த தினகரன் அணி…!

தாஜ்மஹாலில் சிவ பூஜை நடத்திய இந்து அமைப்பினர்…!
பிரதமர் மோடி சென்ற ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்ததன் ஓராண்டு நினை தினம் நவம்பர் 8-ஆம் தேதி வரவிருப்பதையொட்டி அந்நாளை கருப்பு தினமாக அனுஷ்டிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது.2016 நவம்பர் 8-ஆம் தேதி இரவு அப்போது புழக்கத்தில் இருந்த 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி. இந்த அறிவிப்பு நாட்டு மக்களை அதிர்ச்சியடையச் செய்தது. பெரும் கோடீஸ்வரர்களுக்கு எதிரான நடவடிக்கை இது என்று அரசு சொன்ன நிலையில் பெரும் பண முதலைகளை இந்த நடவடிக்கை எதுவும் செய்யவில்லை. ஆனால் சில ஆயிரம் ருபாய்களோடு வாழ்ந்த மக்களின் வாழ்வை சிதைத்து விட்டது.
தங்களின் இருந்த சிறு சேமிப்புகளை வங்கிகளில் மாற்றவும் ஏ.டி.எம் களில் பணம் எடுக்கவும் மக்கள் நீண்ட வரிசையில் நாட் கணக்காக காத்திருந்தனர். 500 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ள மறுத்த மருத்துவமனைகளாலும், ஏ.டி.எம் நெருக்கடிகளாலும் சுமார் 150 பேர் நாடு முழுக்க பலியானார்கள். மக்கள் மடிந்ததைப் போல இந்திய பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்தித்தது.
அப்போது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட தேசிய அளவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக பரந்து பட்ட அளவில் எதிர்ப்பு உருவாகவில்லை. ஆனால் தமிழகம், மேற்குவங்கம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு இருந்தது. இந்நிலையில், இந்த அவலம் நடந்து வருகிற நவம்பர் 8-ஆம் தேதியுடன் ஒரு வருடம் நிறைவடைவதையொட்டு எதிர்க்கட்சிகள் இதை கருப்பு தினமாக கடைபிடிக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ” மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் வர்த்தகர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 8-ஆம் தேதி தேசிய அளவில் கருப்பு தினம் கடைபிடிக்கப்படும். அன்றைய தினம் மாவட்ட தலைநகரங்களில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” என அறிவித்துள்ளார்.
பீகாரில் லாலு பிரசாத் யாதவ் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் திமுக கருப்புச் சின்னம் அணியுமாறு முடிவெடுத்திருக்கிறது.

#Nov8blackday #Denomination #Opposition calls #Nov8 as a #BlackDay of #IndianEconomy !

முக்கிய செய்திகள்

வளர்ச்சிக்கெதிரான மாநிலங்களுக்கு பைசா கூட தர மாட்டேன்: மோடி…!
அமெரிக்கா : இந்திய தம்பதிகள் தண்டனை வழங்கிய குழந்தை சடலமாக மீட்பு…!

கந்து வட்டி கொடுமை:குடும்பமே எரியும் பதற வைக்கும் படங்கள்…!

மத அரசியல் எதிர்ப்பு: சமூக வலைதளங்களில் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு

பராசக்தியும்- மெர்சலும் :சிதம்பரம் டுவிட்…!

#MersalVsModi : டுவிட்டரில் பாஜகவை தெறிக்க விட்ட டிரெண்டிங்…!

ஸ்டாலின் எழுச்சிப்பயணம் மெர்சலான ஒபிஎஸ்-இபிஎஸ்…!

விஜய் டி.விக்கு எதிராக பண்ருட்டி வேல்முருகன் போராட்டம் அறிவிப்பு…!

’மெர்சல்’ கமலுக்காக ஒரு ஸ்பெஷல் ஷோ..!

“இடது அடிப்படைவாதிகள்” : நீயா நானா-ஆன்டனி…!

கந்து வட்டி கொடுமை :நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பமே தீக்குளிப்பு:முழு விபரம்…!

அதிமுகவின் ஒருங்கிணைப்புக் குழு அமைக்க முடியாது ஏன்?

மோடி அதிமுகவின் மீட்பரா?
பணிந்தது மெர்சல் குழு:பாஜகவிடம் மன்னிப்புக் கோரி கடிதம்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*