OPS- தேவர் கவச மீட்பு ஆபரேஷன்: பிளாப் ஆனது எப்படி?

தமிழரசியல் முகநூல் பக்கத்தை லைக் பண்ணுங்க..!

சேகர் ரெட்டி எஸ்கேப் :நடந்ததெல்லாம் நமக்கு மறந்திருக்குமே..!

மாணிக்சந்த் குட்கா நிறுவனர் புற்றுநோயால் மரணம்!

கோடிக்கணக்கான மக்களுடன் மதம் மாறுவேன்” –மாயாவதி எச்சரிக்கை..!

கந்துவட்டி :அசலுக்கு கருமுட்டை,விந்து,கிட்னி…!

`தாஜ்மஹாலை எப்போது இடிப்பீர்கள்?: பிரகாஷ் ராஜ்

தேவர் சாதி தலைவரான பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சூட்டிய தங்க கவசத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரகசியமாக மீட்கச் சென்ற நிலையில் அதிமுக உட்கட்சி பூசல் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி கவசத்தை வழங்க மறுத்துள்ளது. உரிய ஆவணங்களுடன் என்று எப்படியும் கவசத்தை மீட்டு தேவர் சமூகத்தின் உண்மையான பிரதிநிதி நானே என்பதை நீருபிக்க பன்னீர்செல்வம் படாத பாடு படுகிறார்.
தங்க கவசம் வழங்கப்பட்ட வரலாறு
தேவர் சாதி மக்களால் மரியாதைக்குரியவராக வணங்கப்பட்டு வருகிறவர் முத்துராமலிங்க தேவர். அதிமுகவின் வாக்கு வங்கியான தேவர் சாதி மக்கள் இருப்பதால் எம்.ஜி.ஆர் காலம் தொட்டே தேவர் சாதியினர் அதிமுகவில் செல்வாக்குச் செலுத்தி வருகிறார்கள். சசிகலா போயஸ் இல்லத்திற்குள் அடியெடுத்து வைத்த பின்னர் இது மேலும் மேலும் விஸ்தரிக்கப்பட்டு அதிமுகவே தேவர் சாதி கட்சி என்று ஆனது. 2016 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா வென்ற போது தலித் சாதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள்தான் அதிமுக அரசின் முதுகெலும்பாக இருந்தாலும் அதிமுகவில் தேவர் சாதியினரின் செல்வாக்குதான் கொடி கட்டிப்பறக்கும்.
தேவர் சாதி வாக்கை தக்க வைக்க வித விதமான சலுகைகளை அதிமுக அறிவித்த நிலையில் தேவருக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும் என்று சில தேவர் சாதி மடாதிபதிகள் வைத்த கோரிக்கையை ஏற்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 13.5 கிலோ தங்கத்தில் சுமார் ஐந்து கோடி பட்ஜெட்டில் முத்துராமலிங்க தேவருக்கு தங்க கவசம் ஒன்றை அதிமுக கட்சி சார்பில் செய்தார். உடல் முழுக்க தங்கத்தால் போர்த்திக் கொள்ளும் படியான இந்த கவசம் மூன்று பாகங்களாக பிரிக்கும் படி செய்யப்பட்டிருக்கிறது. 2014-ஆம் ஆண்டு ஜெயலலிதா நேரில் சென்று இந்த கவசத்தை போர்த்தினார்.

 

மோடி அதிமுகவின் மீட்பரா?
ஆண்டு தோறும் தேவர் ஜெயந்தி நாட்களில் போர்த்தப்படும் இந்த கவசம் பின்னர் கழட்டி வங்கியில் வைத்து பாதுகாக்கப்படும். பின்னர் அடுத்த தேவர் ஜெயந்திக்கு தங்க கவசம் போர்த்தப்படும், இந்த தங்ககவசத்தை வைத்து அதிமுகவும் , தேவர் சாதியும் ஒரு புள்ளியில் இணைவது போன்ற பாவனையை ஆண்டு தோறும் செய்து வரும் நிலையில், சென்ற ஆண்டு தேவர் ஜெயந்திக்கு ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்ததால் செல்லவில்லை. அமைச்சர்கள் மட்டும் கவசத்தைக் கொண்டு போய் போர்த்தி விட்டு வந்தார்கள்.திருச்செந்தூர் முருகன் கோவில் வைரவேலை திருடியது போல யாரேனும் இதை திருடி விடக் கூடாது என்பதால் விழா முடிந்ததும் மதுரை அண்ணாநகரில் உள்ள ஃபாங்க் ஆப்ஃ இந்தியா வங்கியின் லாக்கரில் வைத்திருக்கிறார்கள்.
பன்னீர் ஆபரேஷன்
நவம்பர் 5-ஆம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை தேனி மாவட்டத்தில் கொண்ட இருக்கும் பன்னீர்செல்வம் பெரும்பாலும் சென்னையை தவிர்த்து விட்டு தேனி பகுதியிலேயே இருந்து வருகிறார். வருகிற 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா நடைபெறும் நிலையில் தங்ககவசத்தை தானே வாங்கி அதை அணிவிப்பதன் மூலம் தேவர் சாதி வாக்குகளைக் கவர முடியும் என திட்டமிட்ட பன்னீர்செல்வம் இன்று அதிமுகவின் பொருளாளர் என்ற பழைய பதவியின் துணையுடன் வங்கிக்குச் சென்று தங்க கவசத்தை கேட்டுள்ளார். அதிர்ந்து போன வங்கி அதிகாரிகள் “கட்சி பிளவு பட்டிருக்கிறது. அதிமுகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்று நீங்கள்தான் கடிதம் எழுதினீர்கள். உங்கள் கட்சியின் சின்னமும் முடக்கப்பட்டிருக்கிறது. இப்போது வரை சட்ட ரீதியாக யார் உண்மையான அதிமுக என்பது முடிவாக வில்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது நாங்கள் தங்க கவசத்தைக் கொடுத்தால் அதிமுகவின் தலைவராக உங்களை ஏற்றுக் கொண்டது போலாகி விடும். அது நிர்வாக ரீதியாக எங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். ஆகவே மாவட்ட நிர்வாகம், நீதிமன்றத்தின் உரிய ஆவணங்களுடனே நாங்கள் கவசத்தை ஒப்படைக்க முடியும்” என்றிருக்கிறது.

 

’மெர்சல்’ காட்டி எடப்பாடி கூட்டத்தைக் கலைத்த தினகரன் அணி…!
பன்னீர்செல்வம் அணியோ எப்படியாவது கவசத்தை மீட்பதில் குறியாக இருக்கிறார்கள். ஆனால் பன்னீர்செல்வம் மதுரைக்குச் சென்று தேவர் கவச மீட்பு ஆபரேஷனில் ஈடுபட்டது தங்களுக்கு தெரியாது என்று ஜெர்க் ஆகிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள்.

முக்கிய செய்திகள்

“எதுக்குல உயிரோட வாழ்ற”இசக்கி முத்துவை மிரட்டியதா போலீஸ்?…! AUDIO

மத அரசியல் எதிர்ப்பு: சமூக வலைதளங்களில் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு

பராசக்தியும்- மெர்சலும் :சிதம்பரம் டுவிட்…!

#MersalVsModi : டுவிட்டரில் பாஜகவை தெறிக்க விட்ட டிரெண்டிங்…!

ஸ்டாலின் எழுச்சிப்பயணம் மெர்சலான ஒபிஎஸ்-இபிஎஸ்…!

விஜய் டி.விக்கு எதிராக பண்ருட்டி வேல்முருகன் போராட்டம் அறிவிப்பு…!

’மெர்சல்’ கமலுக்காக ஒரு ஸ்பெஷல் ஷோ..!

“இடது அடிப்படைவாதிகள்” : நீயா நானா-ஆன்டனி…!

கந்து வட்டி கொடுமை :நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பமே தீக்குளிப்பு:முழு விபரம்…!

மோடி அதிமுகவின் மீட்பரா?
பணிந்தது மெர்சல் குழு:பாஜகவிடம் மன்னிப்புக் கோரி கடிதம்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*