நாளை தேவர் கவசம் மீட்க படை திரட்டும் பன்னீர்:மோதல் அபாயம்…!

தமிழரசியல் முகநூல் பக்கத்தை லைக் பண்ணுங்க..!

தேவர் கவசம் இரு அணிகளுக்கும் இல்லை வங்கி முடிவு?

சென்னை மாநகராட்சி மீது லதா ரஜினி வழக்கு: ஏன் தெரியுமா?

OPS- தேவர் கவச மீட்பு ஆபரேஷன்பிளாப் ஆனது எப்படி?

எங்களுக்கே :தினகரன் வங்கிக்கு கடிதம்..!

முத்துரமலிங்க தேவருக்கு ஜெயலலிதா போர்த்திய தங்க கவசத்தை மீட்க நாளை  காலை பன்னீர்செல்வம் மதுரை  வங்கிக்கு தன் ஆதரவாளர்களுடன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 2014-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய தங்க கவசத்தை மீட்கும் போட்டி அதிமுக அணிகளிடையே உருவாகி உள்ளது.
முன்னாள் முதல்வர் அவர் கையால் போர்த்திய தங்க கவசத்தை தன் கையால் போர்த்தி தேவர் சாதி வாக்குகளை தன் பக்கம் ஈர்க்க நினைக்கிறார் பன்னீர்செல்வம். ஆனால் இதற்கு அதிமுக அம்மா அணி தலைவர் தினகரன் எதிர்ப்பு தெரிவித்து. “நாங்களே உண்மையான அதிமுக ஒன்றிலோ எங்கள் அணி பொருளாளர் ரெங்கசாமியிடம் கவசம் ஒப்படைக்கப்பட வேண்டும். அல்லது பசும்பொன் விழாவை நடத்து முத்துராமலிங்கம் அவர்களுடைய வாரிசுகளிடம் கவசத்தை ஒப்படைக்க வேண்டும்”என்று கடிதம் எழுதிய நிலையில். நாளை காலையே வங்கிக்குச் சென்று எப்படியாவது தங்க கவசத்தை மீட்டு விட வேண்டும் என்று பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களை திரட்டி வருகிறார்.
குறுஞ்செய்திகள் மூலமும் வாட்ஸ்சப், முகநூல் வழியாக பன்னீர்தரப்பினர் காலை தங்க கவசம் வைக்கப்பட்டுள்ள வங்கிக்கு எதிரே திரளுமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.அவர்கள் பரப்பும் தகவல்கள் இப்படி இருக்கிறது.இந்த தகவலை நம்மால் உறுதிப்படுத்த இயலவில்லை என்றாலும் இரு அணியினரிடையே தேவர் தங்க கவசம் தொடர்பாக உருவாகியுள்ள போட்டிகள் எத்தகைய சூழலையும் உருவாக்கலாம் என்பதால் இதற்கும் சாத்தியங்கள் உள்ளது என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

2.0 ஆடியோ வெளியீடு:மிரளவைக்கும் டிக்கெட் விலை..!

220 கட் அவுட்கள்: நீதிமன்றத்தின் விசித்திர கருத்து..!

//தெய்வ திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் ஐயாவின் 110வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு இதயதெய்வம் புரட்சி தலைவி மாண்புமிகு அம்மா அவர்களால் வழங்கப்பட்ட தங்க கவசத்தை வழங்க மாண்புமிகு அம்மா அவர்களின் உண்மை தொண்டன் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் O.பன்னீர்செல்வம் அவர்கள் நாளை காலை 8.45மணிக்கு மதுரை அண்ணாநகர் அருகே உள்ள அம்பிகா திரையரங்கம் எதிரில் உள்ள பாங் ஆப் இந்திய(BANK OF INDIA) வங்கிக்கு வருகிறார்.ஆகையால் அனைவரும் சரியாக 8.45க்கு வந்து கலந்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறோம்.//என்று பன்னீர் தரப்பினர் பரப்பும் தகவலில் உள்ளது.

கந்துவட்டி :அசலுக்கு கருமுட்டை,விந்து,கிட்னி…!

இதனால் பரபரப்பு எழுந்துள்ளது. தினகரன் அணியினர் பன்னீர்செல்வத்திடம் தங்க கவசம் வழங்கப்படக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் 30-ஆம் தேதி நடைபெறும் விழாவுக்கு நாளையே கவசத்தை பெற்று பசும்பொன் தேவர் சாதி பிரமுகர்களிடமும், அவர்களின் வாரிசுகளிடம் ஒப்படைத்து தனது ஆதரவை பெருக்கிக் கொள்ள நினைப்பதோடு. பொருளாளர் அந்தஸ்துக்கு சட்ட ரீதியான அங்கீகாரமும் தேட முயல்கிறார். எடப்பாடி பழனிசாமியுடனான இணைப்பு பெரிய அளவு கைகொடுக்காத நிலையில் தேவர் சாதி வாக்குகளை தன் பக்கம் திரட்டி விட்டால் அதை அரசியல் அடித்தளமாக ஆக்கிக் கொள்ளலாம் என பன்னீர் நினைக்கும் நிலையில், தினகரன் ஆதரவாளர்களும் நாளை வங்கிக்குச் செல்லலாம் என்பதால் நாளை தங்க கவசம் இருக்கும் வங்கியில் மோதல் சூழல் ஏற்படலாம் என்று செய்திகள் வெளியாகியிருக்கிறது.

முக்கிய செய்தி

நடராஜன் எப்படி இருக்கிறார் தெரியுமா?

நவ -7 கட்சி துவங்கும் எண்ணமில்லை :கமல்ஹாசன்…!

சேகர் ரெட்டி எஸ்கேப் :நடந்ததெல்லாம் நமக்கு மறந்திருக்குமே..!

நிஜ வாழ்வில் நடித்தால் காசு வராது :ரஜினிகாந்த்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*