சென்னை மாநகராட்சி மீது லதா ரஜினி வழக்கு: ஏன் தெரியுமா?

தமிழரசியல் முகநூல் பக்கத்தை லைக் பண்ணுங்க..!

2.0: ஷங்கர் கனவு பலிக்கவில்லை?

நாளை தேவர் கவசம் மீட்க படை திரட்டும் பன்னீர்:மோதல் அபாயம்…!

OPS- தேவர் கவச மீட்பு ஆபரேஷன்பிளாப் ஆனது எப்படி?

எங்களுக்கே :தினகரன் வங்கிக்கு கடிதம்..!

சென்னை மாநகராட்சி மீது நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தின் மனைவி வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
கந்து வட்டி கொடுமையில் சிக்கிய இசக்கிமுத்து என்ற கூலித்தொழிலாளியின் குடும்பமே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது. இரு குழந்தைகள், மனைவி, இசக்கிமுத்து என குடும்பமே அழிந்து விட்ட நிலையில் தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் கந்து வட்டி கொடுமை தொடர்பாக போலீசிடம் புகார் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில்தான்,லதா ரஜினிகாந்த் சென்னை மாநகராட்சி மீது வழக்குத் தொடுத்திருப்பது நம் கவனத்தை ஈர்த்தது.

 

மாணிக்சந்த் குட்கா நிறுவனர் புற்றுநோயால் மரணம்!
தமிழகத்தின் ஏழைக் குடும்பங்களில் ஒன்று ரஜினிகாந்த் குடும்பம். மிக எளிமையாக ஒரு வீட்டில் போயஸ் இல்லத்தில் வாழ்ந்து வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி ராமசாமி சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள ஒரு கடையை எடுத்து அதில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த்.
இந்தக் கடைக்கு மாதம் தோறும் ரூபாய் 3,702 வாடகை செலுத்து வந்தார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி கடந்த ஜூன் மாதம் கடையின் வாடகையை உயர்த்தியது. இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் லதா ரஜினிகாந்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீசில் மார்ச் மாதம் முதல் ரூ.21,160 வாடகை கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

கந்துவட்டி :அசலுக்கு கருமுட்டை,விந்து,கிட்னி…!
மாநகராட்சியின் இந்த திடீர் வாடகை உயர்வால் திண்டாடிப் போன லதாரஜினிகாந்த் அதிர்ச்சியடைந்தார். ஏற்கனவே பொருளாதாரச் சிரமத்தில் இருக்கும் நிலையில் வாடகையை வேறு ஏற்றி விட்டார்களே என கவலையடைந்த லதா ரஜினிகாந்த் சார்பில் மோகன் மேனன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் ,

`தாஜ்மஹாலை எப்போது இடிப்பீர்கள்?: பிரகாஷ் ராஜ்
“ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் கடந்த பல வருடங்களாக ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அதில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறோம். மாதம் வாடகை கட்டணம் ரூ.3,702 செலுத்தி வருகிறோம்.திடீரென கடை வாடகையை மாநகராட்சி பல மடங்கு உயர்த்தி உள்ளது. மார்ச் மாதம் முதல் முன் தேதியிட்டு வாடகை கட்டணம் ரூ.21,160 செலுத்த வேண்டும் என அறிவித்து உள்ளது.இந்த திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.வாடகை கட்டண உயர்வு தொடர்பாக முறையாக ஆய்வு நடத்த வேண்டும். மேலும் வாடகை கட்டண உயர்வை ரத்து செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். பழைய கட்டண உயர்வை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது” தமிழக மக்கள் சந்தித்துவரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் லதா ரஜினிகாந்தின் இந்த பிரச்சனையும் கண்போர் நெஞ்சை கலங்க வைத்துள்ளது.

 

முக்கிய செய்தி

நடராஜன் எப்படி இருக்கிறார் தெரியுமா?

நவ -7 கட்சி துவங்கும் எண்ணமில்லை :கமல்ஹாசன்…!

சேகர் ரெட்டி எஸ்கேப் :நடந்ததெல்லாம் நமக்கு மறந்திருக்குமே..!

நிஜ வாழ்வில் நடித்தால் காசு வராது :ரஜினிகாந்த்..!

OPS- தேவர் கவச மீட்பு ஆபரேஷன்பிளாப் ஆனது எப்படி?

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*