தேவர் கவசம் இரு அணிகளுக்கும் இல்லை வங்கி முடிவு?

தமிழரசியல் முகநூல் பக்கத்தை லைக் பண்ணுங்க..!
’ஜெ’ வுக்கு துரோகம்:ரேஷன் சர்க்கரைக்கு ஆப்பு… அடுத்து?

உ.பி உள்ளாட்சி பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு…!

நன்கொடை பெறுவதில் திமுக முதலிடம்..!

சென்னை மாநகராட்சி மீது லதா ரஜினி வழக்குஏன் தெரியுமா?

 

நாம் நேற்றே குறிப்பிட்டது போல பசும் பொன் முத்துராமலிங்க தேவருக்கு 2014-ஆம் ஆண்டு ஜெயலலிதா போர்த்திய தங்க கவசத்தை மீட்க பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், தினகரன் ஆதரவாளர்களும் கவசம் வைக்கப்பட்டுள்ள வங்கிக்கு எதிரே திரண்டுள்ளதால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
பசும்பொன் தேவருக்கு ஜெயலலிதா வழங்கிய தங்க கவசத்தை மீட்க பன்னீர்செல்வம் ரகசியமாக சென்ற நிலையில் வங்கி அவரிடம் கவசத்தை வழங்க மறுத்து விட்டது. இந்நிலையில், நேற்று தினகரன் “நாங்களே உண்மையான அதிமுக எங்களிடமோ அல்லது தேவரின் வாரிசுகளிடமோ தங்க கவசத்தைக் கொடுக்க வேண்டும்” என்று கடிதம் எழுதினார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவே பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், எடப்பாடி ஆதரவாளர்களும் வங்கி முன்னாள் திரளுமாறு பன்னீர் ஆதரவாளர்கள் செய்தி பரப்பினார்கள். அதன்படி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் , செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தங்கள் ஆதர்வாளர்களுடன் வங்கிக்கு வந்தார்கள். பன்னீர்செல்வமும் சிறிது நேரத்தில் வந்தார் அவர்கள் அனைவரும் வங்கிக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். வங்கிக்கு வெளியே ஆதரவாளர்கள் திரண்டனர்.
சிறிது நேரத்தில் அதிமுக அம்மா அணி அமைப்புச் செயலாளர் மேலூர் சாமியும் முக்கிய பிரமுகர்களும் பின்வாசல் வழியே வங்கிக்குள் சென்றார்கள். இரு தரப்பு ஆட்களும் திரண்டு மாறி மாறி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்க இரு அணிகளுக்கும் இடையில் வங்கிக்குள் வைத்து பேச்சுவார்த்தை நடக்கிறது.
தேவருக்கு போர்த்தப்படும் இந்த தங்க கவசத்தை இரு அணிகளுக்குமே வழங்க வேண்டாம். மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து அதை திரும்ப கொண்டு வந்து ஒப்படைக்கும் பொறுப்பையும் மாவட்ட நிர்வாகத்திடமே கொடுக்கலாம் என்பது வங்கி அதிகாரிகளின் விருப்பம்.

தங்க கவசன் தங்களுக்கு கிடைக்கவில்லை என்ற கோபத்தில் கவசத்திற்கு சேதம் வந்து விடக்கூடாது என்பதும் வங்கி அதிகாரிகளின் காவலை. இந்நிலையில், இரு அணிகளில் எந்த ஒரு அணியின் கையில் கவசத்தை கொடுத்தாலும் அது சட்ட ரீதியான சிக்கலை ஏற்படுத்துமா என்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்த வங்கி மதுரை ஆட்சியர் வீரராகவராவை வங்கிக்கு அழைத்தது. வங்கியின் அழைப்பை ஏற்று வங்கிக்கு வந்துள்ள வீரராகவராவ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தங்க கவசத்தை ஆட்சியரிடம் ஒப்படைக்க இரு அணிகளுமே சம்மதித்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில் கவசம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவிடம் ஒப்படைக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி மீது லதா ரஜினி வழக்கு: ஏன் தெரியுமா?

2.0: ஷங்கர் கனவு பலிக்கவில்லை?

நாளை தேவர் கவசம் மீட்க படை திரட்டும் பன்னீர்:மோதல் அபாயம்…!

OPS- தேவர் கவச மீட்பு ஆபரேஷன்பிளாப் ஆனது எப்படி?

எங்களுக்கே :தினகரன் வங்கிக்கு கடிதம்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*