பால்கனி பாலிட்டிக்ஸ்: மாம்பலம் காவல் நிலையத்தில் தீபா..!

தமிழரசியல் முகநூல் பக்கத்தை லைக் பண்ணுங்க..!

புரட்சிக்கும் மாதவனுக்கும் என்ன சார் சம்பந்தம்…! VIDEO

தீபா வீட்டில் கூட்டம் குறைந்தது: தெருவுக்கு வந்த குடும்பச்சண்டை!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் தீபாவின் முன்னாள் கார் ஒட்டுநர் மீதுகொடுத்த புகாரை அடுத்து விசாரணைக்காக ஜெ.தீபா மாம்பலம் காவல் நிலையம் வந்துள்ளார்.

ஜெ.தீபா – மாதவன் இணைந்தனர் இலையில் சாப்பிட்டனர்!

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா போல மேக்கப் போட்டுக் கொண்டு அவரது வீட்டில் இருந்த பால்கனியில் இருந்து இரட்டை விரலை காட்டி அரசியல் செய்து வந்தார் ஜெ.தீபா. இவருக்கு சில நாட்கள் ஊடக முக்கியத்துவமும் கிடைத்தது.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் “எம்ஜிஆர் அம்மா தீபாபேரவை” என்ற அமைப்பை தீபா துவங்கினார். இதில் பதவிகளை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக தீபா கணவர் மாதவனுக்கும் அவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.காணவர் மாதவன் தனிக்கட்சி துவங்கப் போவதாக அறிவித்த நிலையில் தான் துவங்கிய பேரவைக்கு தீபாவின் கார் ஓட்டுநர் ஏ.வி.ராஜா மற்றும் அவரது மனைவி சரண்யா என்ற இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு தொண்டர்கள் ? எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நகைச்சுவைகள் பல மாதங்களாக நடந்த நிலையில், இன்னொரு பக்கம் ஜெயலலிதா சமாதியில் தியானங்களும் நட்ந்து வந்தது. பின்னர் சில வாரங்களுக்கு முன்னர் கணவர் மாதவனும், தீபாவும் இணைந்தனர். பிரிந்தவர்கள் கூடியதும் இருந்தவர்களின் சீட் காலியானது.

தாஜ் மஹா லில் நமாஸுக்கு தடை விதியுங்கள் : ஆர்.எஸ்.எஸ்

தீபாவுக்கு காரோட்டியவர் தீபா பேரவையை கைப்பற்ற நினைத்தார். இப்போது தீடிரென டிரைவர் ராஜா தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக தீபா கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இது தொடர்பான விசாரணை மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில் நடக்கும் நிலையில் தீபாவும், மாதவனும் விசாரணைக்காக அங்கு வந்திருக்கிறார்கள்.
அதிமுகவில் இருக்கிற தலைவலி போதாதென்று இந்த பரபரப்புக்கிடையில் தீபாவின் நகைச்சுவை காட்சிகளும் பரபரப்பாக ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

தாஜ் மஹா லில் நமாஸுக்கு தடை விதியுங்கள் : ஆர்.எஸ்.எஸ்

பாஜக அமைச்சர் செக்ஸ் டேப்ஊடகவியலாளர் கைது!

தேவர் கவசம் இரு அணிகளுக்கும் இல்லை வங்கி முடிவு?

சென்னை மாநகராட்சி மீது லதா ரஜினி வழக்குஏன் தெரியுமா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*