புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் நடிப்பாரா அஜித்?

2.0 ஆடியோ வெளியீடு:மிரளவைக்கும் டிக்கெட் விலை..!

‘மெர்சல்’ புயலில் சிக்கி சின்னாபின்னமான பாஜக

ம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் பற்றிய தகவல்கள்?

‘விவேகம்’ படத்தில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கிறார் அஜித். அவருடைய அடுத்த படம் எந்த இயக்குனரோடு என்ற கேள்வி அவர் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது. அஜித்தின் அடுத்த படத்தையும் சிவா தான் இயக்குகிறார் என செய்திகள் பரவி வந்த நிலையில், ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி தம்பதியினர் அவருக்கு கதை எழுதுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை மாநகராட்சி மீது லதா ரஜினி வழக்கு: ஏன் தெரியுமா?

‘ஓரம் போ’ மற்றும் ‘வா’ படங்களை இயக்கிய புஷ்கர்-காயத்ரி, ‘விக்ரம் வேதா’ படத்துக்கு பிறகு அதிக ரசிகர்களை பெற்றிருக்கிறார்கள். இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் ‘விக்ரம் வேதா’ திரைக்கதைக்காக பரவலாக பாராட்டப்பட்டது. இந்த ஜோடி தற்போது அஜித்தை வைத்து படம் இயக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

சிவா இயக்கத்தில் அஜித் போலீஸாக நடிக்கப் போகிறார், அந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் அஜித் யார் கதையில் நடிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. அஜித் ரசிகர்கள் அவர் தொடர்ந்து சிவா இயக்கத்தில் நடிப்பதை விரும்பவில்லை. அஜித் என்ன முடிவெடுக்கிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழரசியல் முகநூல் பக்கத்தை லைக் பண்ணுங்க..!

2.0: ஷங்கர் கனவு பலிக்கவில்லை?

இமய மலையில் ஆசிரமம் கட்டுகிறார் ரஜினி?

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*