2.0: ஷங்கர் கனவு பலிக்கவில்லை?

தமிழரசியல் முகநூல் பக்கத்தை லைக் பண்ணுங்க..!

நாளை தேவர் கவசம் மீட்க படை திரட்டும் பன்னீர்:மோதல் அபாயம்…!

OPS- தேவர் கவச மீட்பு ஆபரேஷன்பிளாப் ஆனது எப்படி?

எங்களுக்கே :தினகரன் வங்கிக்கு கடிதம்..!

2.0 ஆடியோ வெளியீடு:மிரளவைக்கும் டிக்கெட் விலை..!

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘2.0’  திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது. இதன் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா இன்று துபாயில் நடைபெறுகிறது. இதற்காக நேற்று பத்திரிகையாளரை சந்தித்த ஷங்கர், பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ஆனால் அவருக்கு நீண்ட காலமாக நிறைவேறாத ஆசை ஒன்று இருக்கிறது. ஹாலிவுட் நடிகர் அர்னால்டை எப்படியாவது தன் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியை தொடர்ந்து வருகிறார். ‘2.0’ படத்தில் அர்னால்டு தான் வில்லன் வேடமேற்று நடிப்பதாக இருந்தது, சில காரணங்களால் அவர் இந்த ப்ராஜெக்டை விட்டு விலகிவிட்டார்.

இதுகுறித்து ஷங்கர், “இந்த படத்தில் அர்னால்டை வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்திருந்தேன். இது ஒரு ஹாலிவுட் தரத்தில் உருவாகும் படம், அதுமட்டுமல்லாது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் கதையாக இது அமைந்திருக்கிறது. அதனால் அர்னால்டு நடித்தால் நன்றாக இருக்கும் என விரும்பினேன். அவரை சந்தித்து பேசி கதையை சொன்னேன், அவருக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனது” என்று தெரிவித்தார். இது முதல்முறை அல்ல, ‘ஐ’ படத்திலும் அர்னால்டை நடிக்க வைக்க முயற்சித்தார், அதுவும் தோல்வியில் முடிந்தது. ஷங்கரின் நீண்ட நாள் கனவு எப்போது பலிக்குமென்று தெரியவில்லை.

‘மெர்சல்’ புயலில் சிக்கி சின்னாபின்னமான பாஜக

கந்து வட்டி ஒழிப்பு தீயணைப்புத்துறை தீவிரம்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*