மதுரையில் கவசம் மீட்காதவர்கள்: டெல்லியில் இலை மீட்பார்களா?

தமிழரசியல் முகநூல் பக்கத்தை லைக் பண்ணுங்க..!

சேலம் திமுகவில் கோஷ்டி மோதல்? எம்.பி வீட்டில் குண்டு வீச்சு..!
’ஜெ’ வுக்கு துரோகம்:ரேஷன் சர்க்கரைக்கு ஆப்பு… அடுத்து?

உ.பி உள்ளாட்சி பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு…!

நன்கொடை பெறுவதில் திமுக முதலிடம்..!

பிளவு பட்ட அதிமுகவில் ஒரு அணியின் தலைவரான தினகரனின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிமுகவில் அதிகரித்துச் செல்வது ஒபிஎஸ்-இபிஎஸ் இருவரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுகவின் ஒரு அணியாக ஒபிஎஸ்-இபிஎஸ் அணி பாஜக கட்டுப்பாட்டில் இருப்பதாக பரவலாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த அணியின் நடவடிக்கைகளும் அந்தக் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் படிதான் இருக்கிறது. இன்னொரு பக்கம் ஒபிஎஸ் -இபிஎஸ் இருவருக்கும் இடையில் நடக்கும் பனிப்போர் ஆட்சியிலும், கட்சியிலும் பல குழப்படிகளை உருவாக்குகிறது. இப்போதைய ஆளும் அதிமுகவால் ஒருமித்த கருத்து ஒன்றை கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் உருவாக்க முடியவில்லை.பல்வேறு தலையீடுகள் குழு முரண்பாடுகள் காரணமாக பலவீனமான இந்த மைனாரிட்டி அரசு நீடித்துக் கொண்டிருக்கிறது.

தகுதி நீக்கம், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளி வைக்கப்படும் நிலையில், அதுதான் இந்த அரசின் வாழ்நாளாக இருக்கிறது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு முடிவுக்கு வரும் போது இந்த அரசு அதன் பின்னர் நீடிக்குமா எனும் நிலையில், இருக்கிற வரை தங்களை போட்டி போட்டு நிலைநிறுத்திக் கொள்கிறார்கள் ஒபிஎஸ்-இபிஎஸ் அதிக செலவுகளும் முக்கியத்துவமும் இபிஎஸ் அவர்களுக்கு கிடைக்கும் நிலையில் ஒபிஎஸ் அதிருப்தியில் இருக்கிறார். தன் வலிமையைக் காட்ட நவம்பர் 5-ஆம் தேதி போடியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை பன்னீர் நடத்த இருக்கும் நிலையில், தினகரனுக்கு கட்சியின் கீழ்மட்டத்தில் உள்ளவர்களிடம் செல்வாக்கு அதிகரித்துச் செல்கிறது.
நீட் பொதுக்கூட்டம், அதிமுக விழா மலர் வெளியீடு என பிரமாண்ட கூட்டம் காட்டும் தினகரன் நேற்று மருது சகோதர்களுக்கு மரியாதை செய்ய காளையார்கோவில் சென்ற போது வழியெங்கும் அதிமுக தொண்டர்கள் அவருக்கு பெருந்திரளாக வரவேற்புக் கொடுத்தனர். ஒருவேளை இரட்டை இலை சின்னம் தினகரன் தரப்புக்கு கிடைக்காமல் போனாலும், அதிமுகவில் தொண்டர் செல்வாக்குள்ள தலைவராக தினகரன் இருப்பார் என்கிறது உளவுத்துறை ரிப்போர்ட்.
முத்துராமலிங்க தேவரின் கவசத்தை மீட்கும் விவகாரத்திலும் தினகரன் எதிர்ப்பால்தான் கவசம் பன்னீசெல்வம் கையில் கொடுக்கப்படவில்லை. வங்கியின் எதிரே பன்னீர்செல்வத்துக்கு திரண்டதை விட அதிக கூட்டம் தினகரனுக்கு திரண்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தம் ஆளும் கட்சியையும் ஆட்சியையும் கையில் வைத்திருக்கும் பன்னீரும், எடப்பாடியும் மதுரையில் இருக்கும் தேவரின் கவசத்தை மீட்க முடியாதவர்கள் டெல்லியில் சிக்கியிருக்கும் இலையை எப்படி மீட்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது…!

தமிழரசியல் முகநூல் பக்கத்தை லைக் பண்ணுங்க..!

தேவர் கவசம் இரு அணிகளுக்கும் இல்லை வங்கி முடிவு?

சென்னை மாநகராட்சி மீது லதா ரஜினி வழக்கு: ஏன் தெரியுமா?

2.0: ஷங்கர் கனவு பலிக்கவில்லை?

நாளை தேவர் கவசம் மீட்க படை திரட்டும் பன்னீர்:மோதல் அபாயம்…!

OPS- தேவர் கவச மீட்பு ஆபரேஷன்பிளாப் ஆனது எப்படி?

எங்களுக்கே :தினகரன் வங்கிக்கு கடிதம்..!

பாஜக அமைச்சர் செக்ஸ் டேப்ஊடகவியலாளர் கைது!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*