ரேஷன் கார்ட் இருந்த இடத்தில் ஆதார் வந்தது இதற்குத்தான்…!

தமிழரசியல் முகநூல் பக்கத்தை லைக் பண்ணுங்க..!

“இந்த மழைக்காலத்தில் நான் நிச்சயம் உயிர்பிழைக்க மாட்டேன்”-பேரா சாய்பாபா..!

சேலம் திமுகவில் கோஷ்டி மோதல்? எம்.பி வீட்டில் குண்டு வீச்சு..!
’ஜெ’ வுக்கு துரோகம்:ரேஷன் சர்க்கரைக்கு ஆப்பு… அடுத்து?

உ.பி உள்ளாட்சி பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு…!

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நம் அனைவருக்கும் இருந்த ஒரே அடையாள அட்டை ரேஷன் கார்ட். அரிசி, சர்க்கரை, பாமாயில் என ரேஷன் கடையில் போய் வாங்குகிறோமோ இல்லையோ அதை ஒரு முகவரி அட்டையாகவும், அடையாள அட்டையாகவும் அனைவருமே பயன்படுத்தி வந்தோம். ரேஷன் அட்டை இருந்த இடத்தில் ஆதார் வந்து விட்டது. நாம் முழுமையாக கண்காணிக்கப்படுவதோடு நம் கையில் இருந்த ரேஷன் அட்டையை செல்லாத ஒன்றாக ஆக்கிய போது அதன் ஆபத்தை நாம் புரிந்து கொள்ள வில்லை.
தமிழக ரேஷன் முறை என்பது கோடிக்கணக்கான ஏழைகளின் உணவுப் பழக்கத்தோடு ஒன்றிணைந்த விஷயம். ஏழரை கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழகத்தில் இன்னும் பெரும்பாலான ஏழைகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வது ரேஷன் பொருட்கள்தான். விண்ணை முட்டும் விலைவாசி ஏழைகளை எந்த கடையிலும் நெருங்க விடுவதில்லை. விலை குறைந்த காய்கறிகளை வாங்கி உண்ணும் பெரும்பாலான ஏழை மக்கள் பீன்ஸ், கோஸ் போன்ற காயகறிகளையே வாங்கி சமைக்க முடியாது. அதை கனவிலும் கூட கற்பனை செய்ய முடியாது. தமிழகத்தின் பெரும்பலான மக்களின் வாழ்க்கை இதுதான். நகரப்புற வளர்ச்சியை நோக்கிச் செல்லும் தமிழகமும் ஓரளவு பொருளாதார மேம்பாடு அடைந்துள்ள புதிய மத்தியதரவர்க்கமும் இதன் ஆபத்து பற்றி அக்கறை காட்டாமல் இருக்கிறார்கள். காரணம் அவர்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்பதுதான்.

சென்னை மாநகராட்சி மீது லதா ரஜினி வழக்குஏன் தெரியுமா?
இது போன்ற ஒரு சூழலில்தான் 13.50 காசுக்கு விற்ற சர்க்கரையை 25 ரூபாயாக விலை உயர்த்தியிருக்கிறது மாநில அரசு. மத்திய அரசின் விரித்த வலையில் சிக்கியிருக்கும் தமிழக அரசு அதிலிருந்து மீள்வதற்கு பதிலாக எகத்தாளமான பதில்களையே மக்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது.
ஆனால், சர்க்கரை விலை உயர்வு என்பது அத்தனை எளிதாக கடந்து போகும் விஷயமல்ல.இது ஆபத்தின் முதல் அறிகுறி. நீட் எனும் தேர்வைக் கொண்டு வந்து கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவுக்கு ஆப்படித்த இதே எடப்பாடி அரசு இப்போது சர்க்கரை விலையை உயர்த்தியிருப்பதன் மூலம் “ரேஷன் கடைக்கு வராதே” என்பதை மறைமுகமாகச் சொல்கிறது.
எப்படி கேஸ் சிலிண்டர் மானியம் வங்கியில் செலுத்தப்படும் என்று மொத்தமாக அதை ஊத்தி மூடினார்களோ அது போலவே ரேஷன் கடைகளை மூடி விட்டு மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்துகிறோம் என்று முதல் சில மாதங்கள் சில நூறு ரூபாய்களை அகவுண்ட்டில் போடுவார்கள். அதன் பின்னார் மானியத்தை தானம் செய்யுங்கள் என்று பிரச்சாரம் செய்து படிப்படியாக அதை நிறுத்திக் கொள்வார்கள். காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியாவுக்கு உலக வங்கி விதித்திருக்கும் பல் வேறு நிபந்தனைகளில் ஒன்று “மானியங்கள் கூடாது”என்பது.

மதுரையில் கவசம் மீட்காதவர்கள்: டெல்லியில் இலை மீட்பார்களா?

வைரலாகும் தோனி மகளின் பாடல்: சிறப்பு விருந்தினராக கேரளா கோவிலுக்கு அழைப்பு? (#video)
உலக வங்கி சொல்லும் இந்த நிபந்தனையை சுற்றி வளைத்து நிறைவேற்றுவதன் முதல் படிதான் சர்க்கரை விலை உயர்வு. வறுமை, விவசாயப்பற்றாக்குறை, கடன் சுமை என எவளவோ பிரச்சனைகள் கிராமப்புற ஏழைகளுக்கு இருந்தாலும் இதுவரை அவர்கள் ஜீவித்திருக்க தமிழக ரேஷன் சிஸ்டமே காரணம். உணவு பாதுகாப்பு எனும் பெயரில் அதை கைவைக்க திட்டமிடுகிறார்கள். இரண்டு அறிக்கைகள். ஒரு அடையாள ஆர்ப்பாட்டம் என கடந்து போகும் விஷயமல்ல இது , பல கோடி மக்களின் உயிராதார பிரச்சனை.

2.0: ஷங்கர் கனவு பலிக்கவில்லை?

நாளை தேவர் கவசம் மீட்க படை திரட்டும் பன்னீர்:மோதல் அபாயம்…!

OPS- தேவர் கவச மீட்பு ஆபரேஷன்பிளாப் ஆனது எப்படி?

எங்களுக்கே :தினகரன் வங்கிக்கு கடிதம்..!

பாஜக அமைச்சர் செக்ஸ் டேப்ஊடகவியலாளர் கைது!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*