”எனக்கு நீண்ட நாள் வாழ்வதில் ஆர்வம் இல்லை” -இந்திராகாந்தி…!

 குஜராத் பாஜகவை தோற்கடிக்க களமிரங்கியது சிவசேனா…!

இந்தியாவில் இனி மதம் மாறி திருமணம் செய்யவே முடியாதா?

மழையே பெய்யாத சேலத்தில் முதல்வர் ஆலோசனை…!

தேவர் குருபூஜை :பிளவு பட்டது அதிமுக வாக்கு வங்கி!

கடைசி புதன்கிழமை, இந்திரா காந்தி தன் கரங்களை கூப்பி, தன்னுடைய அலுவலகத்துக்கு செல்லும் வழியில் இருந்த காவலர்களை பார்த்து, “ நமஸ்தே” என்றார். அவர் சொன்ன கடைசி வார்த்தை அது தான். அதை தொடர்ந்த சில மணி நேரங்களிலேயே, இந்தியா மிக மோசமான வன்முறை தாக்குதலை சந்தித்தது. 1947 பிரிவினைக்கு பிறகு, இந்தியா கண்ட மிக மோசமான வன்முறை அது. இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டிய போது இருந்த ஒரே கேள்வி, இந்தியாவின் புதிய தலைவராக அனுபவமில்லாத ராஜீவ் காந்தியால் கலாச்சாரத்தாலும்,மதத்தாலும் வேறுபட்டிருக்கும் 746 மில்லியன் மக்களை ஒன்றாக்க முடியுமா?  என்பது தான்.

ஒரு அழகான , வெளிச்சமான காலையில் தான் அந்த பிரளயம் தொடங்கியது. பிரதமரின் அதிகாரப்பூர்வமான அந்த வசிப்பிடத்தில் இரண்டு பங்களாக்கள் இருந்தன. ஒன்றில் அலுவலகங்களும், பல பொது அறைகளும் இருந்தன. மற்றொன்றில், பிரதமர் தன் மகன் ராஜிவ் மருமகள் சோனியா காந்தி, அவர்கள் இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்து வந்தார். ராஜீவ் அப்போது ஒரு அரசியல் பயணமாக மேற்கு வங்காளம் சென்றிருந்தார். 66 வயதாயிருந்த இந்திரா காந்தி, நல்ல உடல்நலத்தோடும் உற்சாகத்தோடும் ஐந்தாவது முறையாக பிரதமராவதற்கு தயார் செய்து கொண்டிருந்தார்.

தங்கள் பங்களாவில் கதவுகளை திறந்த படிக்கட்டுகளில் நடந்து வந்தர். அவரை தொடர்ந்து ஐந்து பாதுகாவலர்கள் நடந்து வந்தார்கள். ஆங்கில நடிகர் மற்றும் இயக்குநருமான பீட்டர் உஸ்தினோவை பார்க்க சென்று கொண்டிருந்தார் இந்திரா காந்தி.  பீட்டர் அவரோடு கடந்த இரண்டு தினங்களாக ஒரிசா பிரச்சாரத்தில் பயணித்துக் கொண்டிருந்தவர். அவரை இந்திரா காந்திக்கு பிடித்திருந்தது “ எனக்கு மிகவும் சலிப்பாக இருப்பது இரண்டாம் தர ஊடகவியலாளர்கள். ஆனால், சாதுர்யமான பத்திரிக்கையாளரை பார்த்தால், நான் நல்லதொரு பேட்டியளிப்பேன்” என்று அவர் சொல்லியிருந்தார்.

தங்களை சீக்கியர்கள் என அடையாளப்படுத்தும் தாடியும், டர்பனும் அணிந்து பாதையில் நின்று கொண்டிருந்தார்கள் இரண்டு காக்கி அணிந்த காவலர்கள். அவர்களில் ஒருவரான பீண்ட் சிங், இந்திரா காந்தியின் ஃபேவரைட். காந்திக்கு அவரை பத்து வருடங்களாக தெரியும். அமிர்தசரஸில் சீக்கிய தீவிரவாதிகளை அழிக்க ராணுவத்தை அனுப்பிய பிறகு, சீக்கிய காவலர்களை நம்ப முடிகிறதா எனக் கேட்ட போது, பீண்ட் சிங்கை பார்த்துவிட்டு, “ இந்த மாதிரியான சீக்கியர்கள் என்னை சுற்றி இருக்கும் போது, நான் பயப்பட ஒரு காரணமும் இல்லை என்று நம்புகிறேன்” என பதிலளித்தார்.இந்திய உளவுத்துறையின் இயக்குநர் காவலர் படையில் இருந்து சீக்கியர்களை நீக்கி விடலாம் என்ற போது, அதை மறுத்த இந்திரா காந்தி, “ நாம் மதச்சார்பற்றவர்கள் என சொல்லிக் கொள்ள முடியுமா?” என வேகமாக பதிலளித்திருக்கிறார். பீண்ட் சிங்கிற்கு பக்கத்தில் ஐந்து மாதங்களுக்கு முன் இந்திரா காந்தியின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட 21 வயதான சத்வந்த் சிங் நின்று கொண்டிருந்தார்.

இந்திரா காந்தி அவர்களுக்கு நமஸ்தே சொல்லும் போது அவர்கள் ஏழு அடி தூரத்தில் கூட நின்றிருக்கவில்லை. பீண்ட் சிங் ஒரு .38 துப்பாக்கியை எடுத்து அவருடைய வயிற்றில் மூன்று தோட்டக்களை செலுத்தினார். சத்வந்த் சிங், தன்னுடைய ஸ்டென் ஆட்டோமெட்டிக் துப்பாக்கியை எடுத்து நிலை குலைந்து கிடந்த இந்திரா காந்தியை சுட்டார்.ஏழு தோட்டக்கள் அவருடைய வயிற்றை துளைத்தது, மூன்று அவருடைய மார்பிலும், ஒன்று அவர் இதயத்திலும் பாய்ந்தது. பிரதமர் இறந்து விட்டார்.

2027-ல் இந்தியா இஸ்லாமிய நாடாகும் : யுவ வாகினி

ஆர்.கே.நகரில் அதிமுகவுக்கு பதில் பாஜக போட்டி?

காலை உணவை புறக்கணித்து தமிழக காவல்துறையினர் போராட்டம்!

துப்பாக்கி வெடி சத்தத்தை கேட்டவுடன், ராஜீவின் மனைவி சோனியா காந்தி படிக்கட்டுகளில், “ மம்மி!! ஓ மை காட், மம்மி!” என கத்தியபடியே ஓடி வந்த போது, இந்திரா காந்தியின் ஆரஞ்சு சாரி முழுக்க ரத்தத்தில் நனைந்திருந்தது. இந்திரா காந்தியின் நெடுநாள் ஆஸிஸ்டெண்ட் அர்.கே.தவான் அவரை வெள்ளை அம்பாசடர் காருக்கு தூக்கி சென்றார்.கார் எய்ம்ஸ் மருத்துவமனையை நோக்கி வேகமாக பறந்த போது, சோனியா காந்தி இந்திரா காந்தியை மடியில் கிடத்தியிருந்தார்.

மருத்துவமனையில், பிரதமரின் உடலை எட்டாவது மாடிக்கு ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றார்கள். அங்கே பனிரண்டு மருத்துவர்கள், ஒரு அற்புதத்தை செய்துவிட நினைத்தார்கள்.ஒரு செயற்கை நுரையீரலையும், இதயத்தையும் பொருத்திய பிறகு, ஏழு தோட்டக்களை எடுத்தார்கள். 88 பாட்டில் ஓ நெகடிவ் ரத்தத்தை செலுத்தினார்கள். அமைச்சர்கள் மருத்துவமனையின் கருத்தரங்க அறையில் காத்திருந்தார்கள். “ அவர் இறந்து விட்டார் என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை. அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவே இல்லை”. மதியம் 1.45 மணிக்கு தான் முதல்முறையாக ஒரு செய்தி நிறுவனம மிஸஸ் காந்தி இஸ் டெட்’ என செய்தி வெளியிட்டது.

இந்திர காந்தி புல்லட்ப்ரூஃப் ஆடை அணிய மறுப்பு தெரிவித்தது அவர் துணிச்சலாலும், தைரியத்தாலும், பிடிவாதத்தாலும் தான். அவருடைய மரணத்திற்கு ஒரு நாள் முன்னர், ஒரிசாவில் ஒரு கூட்டத்தில் அவர், “ எனக்கு நீண்ட வாழ்வதில்  ஆர்வம் இல்லை. எனக்கு இதை பார்த்தெல்லாம் பயமில்லை. என்னுடைய உயிர் நாட்டு சேவைக்காக போனால் எனக்கு கவலையில்லை. ஒருவேளை நான் இன்று இறந்தால், என்னுடைய ஒவ்வொரு துளி ரத்தமும் நாட்டை வலிமையாக்கும்” என்று பேசியிருந்தார்.

– வில்லியம் ஈ ஸ்மித்

கட்டுரையாளர் குறிப்பு – கட்டுரையாளர் வில்லியம் ஈ ஸ்மித், டைம் பத்திரிக்கையில் முப்பத்தைந்து வருடங்கள் வேலை செய்தவர். அமெரிக்கா -இஸ்ரேல் கலவரத்தை முக்கியமாக ஆவணப்படுத்தியவர். 1992 ஆம் ஆண்டு 62 வயதில், மன்ஹாட்டனில் புற்றுநோயால் உயிரிழந்தார்.

இந்திய கப்பல் வாரியத்தில் ஜோ டி குரூஸ்!

மம்தாவை வரச் சொல்லுங்கள்: ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம்!

பிரதமர் மோடியை விமர்சித்ததாக ஒருவர் கைது…!

கோபாலபுரம் வீட்டில் விக்ரம் மகளின் திருமணம் முடிந்தது?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*