தேவர் குருபூஜை :பிளவு பட்டது அதிமுக வாக்கு வங்கி!

2027-ல் இந்தியா இஸ்லாமிய நாடாகும் : யுவ வாகினி

ஆர்.கே.நகரில் அதிமுகவுக்கு பதில் பாஜக போட்டி?

காலை உணவை புறக்கணித்து தமிழக காவல்துறையினர் போராட்டம்!
இதுவரை அதிமுகவின் வாக்குவங்கியாக இருந்த தேவர் சாதி வாக்குகள் பிளவு பட்டுள்ளதை தேவர் குருபூஜை நிகழ்வுகள் உணர்த்தியிருக்கிறது.
தேவர் தலைவரான பசும் பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை இன்று பசும்பொன் கிராமத்தில் நடைபெறுகிறது. எம்ஜிஆர் காலம் தொட்டு அதிமுகவின் வாக்கு வங்கி என்று நம்பப்படும் தேவர் சாதி வாக்குவங்கியை தக்க வைக்க அதிமுக மற்ற சாதி தலைவர்கள், விழாக்களை விட தேவர் குருபூஜைக்கு அதிக முக்கியத்துவங்களை வழங்கும். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக கோஷ்டி மோதலால் பிளவு பட்டுள்ள நிலையில் கடந்த காலங்களில் இருந்த முக்கியத்துவம் இந்த முறை தேவர் குருபூஜைக்கு இல்லை. எப்போது தேவர் சாதி vs தலித் என்று இருக்கும் பதட்டம் இம்முறை சொந்த சாதிக்குள்ளேயே பிளவு ஏற்பட்டுள்ளதால் இரு பிரிவாக பிரிந்துள்ளனர். கொங்கு பகுதியைச் சேர்ந்த கவுண்டரான எடப்பாடி பழனிசாமியை தேவர் சாதியினர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அதே நேரம் பன்னீர்செல்வம் மீது முழு நம்பிக்கையும் வைக்க முடியவில்லை. சசிகலா போயஸ் இல்லத்தினுள் சென்ற பிறகுதான் தேவர் சாதி அரசியல் அதிகாரமாக உச்ச நிலைக்குச் சென்றது.


பன்னீர்செல்வமே அப்படி சென்றவர்தான். இப்போது முத்துராமலிங்க தேவருக்கு ஜெயலலிதா கொடுத்த கவசத்தை பன்னீர் கைப்பற்றச் சென்று சிக்கலான நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத்தின் வாரிசுகளையே வங்கிக்கு அழைத்துச் சென்று பேசியும் கிடைக்காத நிலையில், மாவட்ட ஆட்சியர் மூலம் கவசம் பசும்பொன்னுக்கு வந்தது.
இது முத்துராமலிங்க தேவரின் ஆதரவாளர்களிடமும், தேவர் சாதி மக்களிடமும் பிளவை உருவாக்கியிருக்கிறது. தஞ்சை, மதுரை, தேனி, பெரியகுளம் போன்ற பகுதிகளில் செறிவாக வாழும் இச்சாதியினரில் கணிசமானவர்கள் சசிகலா ஆதரவாளர்களாக உள்ளார்கள்.
இன்று காலை கூட்டம் கூடுவதற்கு முன்பே காலை 8 மணிக்கு சத்தமில்லாமல் பன்னீர்செல்வமும், எடப்பாடியும் தேவர் சமாதிக்கு வந்து மலர்மாலை அணிவித்து விட்டு வேகமாக சென்று விட்டார்கள். பின்னர் ஸ்டாலின் வந்து சென்றார். ஆனால் அமர்களமாக குருபூஜைக்கு வந்தது தினகரன் தான் நூற்றுக்கணக்கான கார்களில் வந்த தினகரன் ஆதரவாளர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பதட்டம் உருவானது. கட்சி மாநாட்டுக்கு வருவது வழியெங்கும் மலர் மாலைகளையும், ஆரத்தி வரவேற்பையும் பெற்று வந்த தினகரன் தேவர் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பும் போது வெளியில் வைத்திருந்த எடப்பாடி, பன்னீர் கட் அவுட்கள் மொத்தத்தையும் கிழித்து வீசி விட்டனர் தினகரன் ஆதரவாளர்கள்.

உயர்நீதிமன்றம்: துப்புறவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள்…!
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் வராத தேவர் சாதி பிரமுகர்களும் இளைஞர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு தினகரனுக்கு வாழ்த்துக் கோஷம் போட்டதை அங்குள்ள உளவுத்துறை போலீஸ் குறித்துக் கொண்டது.பசும்பொன்னில் போலீஸ் விதிமுறைகளை மீறியதாக தினகரன் மீது ஒரு வழக்கு பதியப்படலாம்.
ஒரு கட்சிக்குள் நடக்கும் மோதல் சாதிக்குள் பிளவை உருவாக்கவில்லை. ஆனால் அது அதிமுகவின் வாக்கு வங்கி என்ற நிலை உடைந்து விட்டது.
இதுவரை தேவர் குருபூஜையை வைத்து தேவர் சாதிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உருவாகும் பதட்டம் இம்முறை சொந்த சாதிக்குள்ளேயே உருவாகியிருக்கிறது.

இந்திய கப்பல் வாரியத்தில் ஜோ டி குரூஸ்!

மம்தாவை வரச் சொல்லுங்கள்: ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம்!

பிரதமர் மோடியை விமர்சித்ததாக ஒருவர் கைது…!

கோபாலபுரம் வீட்டில் விக்ரம் மகளின் திருமணம் முடிந்தது?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*