மோடியை புகழ்ந்து பேச தடை போட்ட ஓபிஎஸ் -இபிஎஸ்..!

சென்னை மாநகராட்சி:பூங்காக்கள் தனியாருக்கு-ஸ்டேடியத்தில் கட்டணம்…!

தமிழக எழுத்தாளர் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்த கேரள முதல்வர்..!

குஜராத் பாஜகவை தோற்கடிக்க களமிரங்கியது சிவசேனா…!

2027-ல் இந்தியா இஸ்லாமிய நாடாகும் : யுவ வாகினி

இந்தியாவில் நம்பர் ஓன் இடத்தில் சன் டிவி…!

மோடியை புகழ்ந்தோ, மோடி இருக்கிறார் என்றோ பேசக்கூடாது என்று அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கு ஒபிஎஸ் -இபிஎஸ் தரப்பு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
“பிரதமர் மோடி ஆட்சியில் இருக்கும் வரை எடப்பாடி அரசுக்கு எந்தப் பாதிப்பும் வராது என்றும், எங்களுக்கு எந்த ஆபத்து வந்தாலும் அவர் பார்த்துக்கொள்வார் ” என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி சர்ச்சைகள் உருவாகி ஓய்ந்த நிலையில், இப்போது சட்ட ரீதியாக சங்கடத்தில் நெளிகிறது ஒபிஎஸ் -இபிஎஸ் அணி.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் மோடி ஆதரவோடு இரட்டை இலையை மீட்டு விடலாம் என ஒபிஎஸ் -இபிஎஸ் தரப்பு நினைப்பதாக ஊடகங்களிலும், பொது வெளியிலும் கருத்துக்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை பதிவு செய்த தினகரன் தரப்பு இரட்டை இலை தொடர்பாக தேர்தல் கமிஷனில் நடக்கும் விசாரணையில் அதையே ஆதாரமாக வைத்து வாதாடி வருகிறது.

எப்போது பத்திரிகையாளர்களை சந்தித்தாலும் “இலை எங்களுக்குத்தான்” “எங்களுக்குத்தான் இலை கிடைக்கும்”என்று பேசுவதையும் சுட்டிக்காட்டிய தினகரன் தரப்பு. இது விசாரணையில் அழுத்தங்களை ஏற்படுத்தாதா என்று விவாதிக்க அதை சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம் இது தொடர்பாகவும் இன்று விசாரிக்க இருக்கிறது.

”எனக்கு நீண்ட நாள் வாழ்வதில் ஆர்வம் இல்லை” -இந்திராகாந்தி…!

இந்தியாவில் இனி மதம் மாறி திருமணம் செய்யவே முடியாதா?

தேவர் குருபூஜை :பிளவு பட்டது அதிமுக வாக்கு வங்கி!
நாளை இரட்டை இலை ஒபிஎஸ்-இபிஎஸ் தரப்புக்குத்தான் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தாலும் அந்த தீர்ப்பின் மீது சந்தேகம் படரும் படி இவர்களின் பேச்சு உள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் கருத்து உள்ளதால். ஒபிஎஸ் -இபிஎஸ் தரப்பு அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் மோடி பற்றி பேச வேண்டாம் என்று உத்தரவிட்டிருக்கிறார்களாம். ராஜேந்திர பாலாஜி தன் பேச்சுக்கு விளக்கம் கொடுத்ததும் அதனால்தானாம்.
இலை கிடைக்கும் வரை இனி யாரும் மோடியை பற்றி வெளிப்படையாக ஒபிஎஸ்- இபிஎஸ் அணிகளில் பேச மாட்டார்கள்.

காலை உணவை புறக்கணித்து தமிழக காவல்துறையினர் போராட்டம்!

மம்தாவை வரச் சொல்லுங்கள்: ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம்!

பிரதமர் மோடியை விமர்சித்ததாக ஒருவர் கைது…!

தினகரன் எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய ஒபிஎஸ்-இபிஎஸ் மனு..!slid

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*