புதுச்சேரியை அழிக்கத் துடிக்கிறார் கிரண்பேடி:திமுக எம்.எல்.ஏ…!

மைனாரிட்டி அரசை பாதுகாக்கும் நீதிமன்ற உத்தரவு..!

வீடு திரும்பினார் நடராஜன்:எடப்பாடிக்கு நன்றி சொன்னாரா உண்மை என்ன?

தேர்தல் கமிஷனை திணறடிக்கும் தினகரன்:ஆனால்…!

ஒபிஎஸ்- இபிஎஸ் தாக்கல் செய்த 425 போலி ஆவணங்கள்…!
புதுச்சேரி கவர்னராக இருக்கும் கிரண்பேடியை அங்குள்ள பாஜகவை தவிற அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கும் நிலையில் , புதுச்சேரி தி.மு.க-வின் தெற்கு மாநில அமைப்பாளரும், எம்.எல்.ஏ-வுமான சிவா கிரண்பேடி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:-‘‘யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கென்று வரலாறுகளும் தனித்தன்மைகளும் உண்டு. நாடு முழுவதும் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது புதுச்சேரி மட்டும் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியின்கீழ் இருந்தது. 1954 நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரி விடுதலை அடைந்தது. ஆனாலும், 1962-ம் ஆண்டுதான் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு புதுச்சேரி இந்தியாவோடு இணைக்கப்பட்டது. அதுவரை புதுச்சேரி தனி நாடு போலத்தான் செயல்பட்டு வந்தது. விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் புதுச்சேரியில், கனிம வளங்கள் என்று எதுவும் இல்லை. அதனால்தான் நாட்டின் ஒரு சந்தை மாநிலமாகப் புதுச்சேரியைத் திட்டமிட்டு உருவாக்கினார்கள்.

ராகுலுக்கு நன்றி சொல்லிய நிர்பயாவின் அம்மா!

ஜிம்முக்குச் சென்று கும்மென்று உடலை வைத்திருக்கும் ஸ்டாலின்:வைரல் வீடியோ..!

 

மற்ற மாநிலங்களைவிடப் புதுச்சேரியில் அனைத்துப் பொருள்களுக்கும் விலையும் வரியும் குறைவாக இருக்கும்படி சட்டம் நிர்ணயிக்கப்பட்டது. கார்கள், மின்சாதனப் பொருள்கள், வாகனங்களின் டயர்கள், டைல்ஸ் மதுபானங்கள் உள்ளிட்டப் பெரும்பாலான பொருள்களுக்கு அண்டை மாநிலங்களைவிட வரிகள் குறைவாகவே விதிக்கப்பட்டன. அதன் காரணமாகவே பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு வந்து பொருள்களை வாங்கிச் செல்வதை வழக்கமாக்கினர். அதன்மூலம் மாநில அரசுக்கும் வரிவருவாய் ஏற்பட்டது. தொழிற்சாலைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட காரணத்தால்தான் பல உற்பத்தித் தொழிற்சாலைகள் புதுச்சேரியில் தொடங்கப்பட்டன. புதுச்சேரிக்கு வந்து கார்களையும், இருசக்கர வாகனங்களையும் வாங்கிச் செல்லும் வழக்கம் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடைமுறையில் இருக்கிறது.இது, ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் விஷயம்தானே தவிர… புதிய விஷயம் அல்ல. அதனால்தான் நாடு முழுவதும் ஒரே வரி என வாட் நிர்ணயிக்கப்பட்டபோது, புதுச்சேரியில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. தற்போது சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டாலும், பல பொருள்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்; குறைந்த வரி நிர்ணயிக்கவேண்டும் என மாநில அரசு போராடி வருகிறது. புதுச்சேரி மாநிலத்துக்கு என உள்ள பல்வேறு தனித்தன்மைகளை உணராமல், வரலாறு தெரியாமல் ஒருவர் ஆளுநராக இருப்பதும், அவர் தொடர்ந்து நீடிப்பதும் புதுச்சேரி மாநிலத்துக்கு அழகல்ல. புதுச்சேரிக்கான வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பதும், வரி வருவாயைக் கெடுப்பதும்தான் ஆளுநரின் வேலையா?

புதுச்சேரிக்கு வருவாய் வரும் வழிகளை எல்லாம் அடைத்து புதுச்சேரியை அழித்துவிடத்தான் ஆளுநர் துடிக்கிறார். மாநிலத்தின் மக்கள்நலத் திட்டங்கள், வரி வருவாய் என அடுக்கடுக்காக அனைத்து அம்சங்களையும் பாதிக்கும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஆளுநரை இன்னும் நாம் புதுச்சேரியில் வைத்திருக்க வேண்டுமா ? மத்திய அரசும் அவரைப் பதவியில் தொடரச்செய்வது நியாயமாகுமா? புதுச்சேரி மக்களின் உணர்வுகளோடும், உரிமைகளோடும் ஆளுநர் விளையாடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரான போராட்டங்கள் தற்போது ஆங்காங்கே வெளிவரத் தொடங்கியுள்ளன. ஒட்டுமொத்தமாகக் கொந்தளித்து எழும் நிலைக்குப் புதுச்சேரி மக்களை மத்திய அரசு தள்ளிவிட வேண்டாம். புதுச்சேரி மக்களின் மனநிலையை உணர்ந்து ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்” என்று கூறியிருக்கிறார். புதுச்சேரி மக்களின் மன நிலையை உணர்ந்து ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா?

ஜோசப் விஜய் தமிழனா?: காவிகளின் கோமாளித்தனமான பாடல் (#வீடியோ_உள்ளே)

தப்புத் தப்பாய் வந்தேமாதரம் பாடி நெட்டிசன்களிடம் சிக்கிய பாஜக பிரமுகர்… VIDEO..!

சசிகலா புஷ்பா முன் மண்டியிட்ட அதிமுக நவநீதகிருஷ்ணனை குறிவைப்பது ஏன்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*