மைனாரிட்டி அரசை பாதுகாக்கும் நீதிமன்ற உத்தரவு..!

ஒபிஎஸ்- இபிஎஸ் தாக்கல் செய்த 425 போலி ஆவணங்கள்…!

ரவா கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்க திட்டம்?

தேர்தல் கமிஷனை திணறடிக்கும் தினகரன்:ஆனால்…!

தப்புத் தப்பாய் வந்தேமாதரம் பாடி நெட்டிசன்களிடம் சிக்கிய பாஜக பிரமுகர்… VIDEO..!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டிருப்பதன் மூலம் இன்னும் சில மாதங்கள் இந்த அரசு தப்பிப் பிழைக்கும் எனத் தெரிகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்யை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனுக் கொடுத்தனர். திமுகவின் இரு முறை இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுக்கொடுத்த நிலையில், ஆளுநர் இந்த மனு மீது பல வாரங்களாக ஒரு முடிவும் எடுக்கவில்லை. கவர்னர் ஏற்படுத்திய இந்த காலதாமதத்தைப் புரிந்து கொண்ட சபாநாயகர் தனபால் அவரிடம் மனுக் கொடுத்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்தார். இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து தினகரன் அணியும், திமுக உறுப்பினர்கள் 21 பேருக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக திமுக ஒரு வழக்கு தொடுத்தது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பன்னீர் அணி எம்.எல்.ஏக்கள் 12 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இறக்குமதியான ஆற்றுமணலை துறைமுகத்திலேயே முடக்கியிருக்கும் மணல் மாஃபியாக்கள்…!
ஓபிஎஸ், மாஃபா அமைச்சர் பதவியில் நீடிப்பதை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சர் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது.தகுதி நீக்க வழக்குகள் சம்பந்தமாகதான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என செம்மலை தொடர்ந்த வழக்கும் விசாரணையில் உள்ளது. பல்வேறு காலகட்டங்களில் விசாரணைக்கு வந்த வழக்குகளை ஒரே தன்மையுடன் இருப்பதால் மொத்தமாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி ரவிச்சந்திர பாபு தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவை விஞ்சிய மழை நிவாரணம்:வியக்க வைக்கும் புகைப்பட தொகுப்பு…!

சசிகலா புஷ்பா முன் மண்டியிட்ட அதிமுக நவநீதகிருஷ்ணனை குறிவைப்பது ஏன்?

இன்று வழக்குகள் அனைத்தும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் விசாரணைக்கு எடுக்கக்கூடாது என்று வாதிட்டார்.

தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வழக்கை வேண்டுமென்றே தாமதம் செய்வதற்காக இது போன்று சொல்வதை ஏற்க முடியாது என்று வாதிட்டார். நீதிபதி ரவிச்சந்திர பாபு இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்குகள் அனைத்தையும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைப்பதாக தெரிவித்தார்.

அரசியல் அமைப்பின் பல அம்சங்களை ஆராய வேண்டி இருப்பதாலும், ஆளுநர், சபாநாயகர் அதிகாரத்தில் எந்த அளவுக்கு தலையிட முடியும் என்கிற பிரச்சினையும் உள்ளதாலும், வழக்கின் முக்கியத்துவம் கருதி இதை தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு எடுக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
இப்போது பதவியில் இருக்கும் எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை. பெரும்பான்மை இல்லாத இந்த அரசை முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் காப்பாற்றி வைத்து விட்டுச் சென்ற நிலையில், நீதிமன்றத்திலும் தேவையற்ற குழப்பத்தையும் கால தாமதத்தையும் ஏற்படுத்துவன் மூலம் இந்த மைனாரிட்டு அரசு தன் ஆயுளை நீடித்திக் கொண்டிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*