ஸ்ரீரங்கம் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது!

ஸ்ரீரங்கம் கோவிலின் சீரமைப்பு பணிக்காக யுனெஸ்கோ விருது வழங்கியிருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில் அரசு-தனியார் கூட்டு ஒப்பந்தத்தில் நடந்த சீரமைப்பு பணி யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பிற்கான ஏசியா பசிஃபிக் மெரிட் விருதை வென்றிருக்கிறது.

ஆசியா-பசிஃபிக் பகுதியில் இருக்கும் பத்து நாடுகளில் இருந்து சென்ற பல புராஜெக்டுகளில், ஸ்ரீரங்கம் கோவில் தேர்வாகியிருக்கிறது. இதற்கு நடுவர்களாக ஒன்பது சர்வதேச பராமரிப்பு நிபுணர்கள் இருந்திருக்கின்றனர்.

இந்த கோவிலின் சீரமைப்பு பணி  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் 2014 ஆம் ஆண்டு தொடங்கியது. அவர் 2011 ஆம் ஆண்டு, ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல கட்டங்களாக நடந்த சீரமைப்பு பணிக்கு இருபத்தைந்து கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. அரசும், பிற நன்கொடையாளர்களும் இதற்கு உதவியிருக்கிறார்கள். 2015 ஆம் ஆண்டின் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதம் என இரண்டு கட்டங்களாக நடை பெற்றது.

இந்த கோவிலின் இரண்டாம் கட்ட சீரமைப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*