ஆண், பெண் சமத்துவம்: மிக மோசமான இடத்தில் இந்தியா

WARNING … மொபைல் ஃபோனை தாக்கும் மின்னல்!

அசத்தலான 108 ஆம்புலன்ஸ் அப்ளிகேசன்…!

புதுச்சேரியை அழிக்கத் துடிக்கிறார் கிரண்பேடி:திமுக எம்.எல்.ஏ…!

மழை பற்றிய வதந்திகளை பரப்பாதீர்:நம்பாதீர்…!

உலக பொருளாதார மன்றத்தால் 2017-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 144 நாடுகளில் கணக்கெடுப்பு செய்யப்பட்ட இந்த பட்டியலில், இந்தியா 108-ஆவது இடத்தை பிடித்துள்ளது. இது இந்திய நாட்டுக்கு மிகவும் மேசமான பின்னடைவு, கடந்த 2016-ஆம் ஆண்டு 87 ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் ஐஸ்லாந்து, பின்லாந்து மற்றும் நார்வே போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளது. தெற்காசிய நாடுகளில் வங்காளதேசம் 47-ஆவது இடத்தை பிடித்து இந்தியாவை காட்டிலும் முன்னிலையில் உள்ளது. இந்த வீழ்ச்சிக்கு முக்கியமான காரணங்கள் இரண்டு, ‘உடல்நலம் மற்றும் உயிர் வாழ்தல்’ என்ற பிரிவில் 141-ஆவது இடத்தில் உள்ளது இந்தியா. பாலின விகிதத்தில் மோசமான நிலையில் இருக்கிறது, ஆண் குழந்தை தான் வேண்டும் என்ற மனநிலை இந்தியர்களிடம் அதிகமாக காணப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதற்கு அடுத்தபடியாக ‘பெண்களின் பொருளாதார பங்களிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள்’ என்ற பிரிவில் 136-ஆவது இடத்தில் இருந்து 139-ஆவது இடத்துக்கு வந்துள்ளது இந்தியா. மிக மோசமான பாலின இடைவெளி குறியீட்டை கொண்ட ஈரான், யேமன், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் சிரியா போன்ற நாடுகளுக்கு அடுத்த இடத்தை பிடித்திருக்கிறது. ஒரு ஆணின் ஆண்டு வருமானத்தில் கால்வாசி அளவுதான் ஒரு இந்திய பெண்ணின் சராசரி ஆண்டு வருமானமாக உள்ளது. ஆண்கள் ஒரு பணியை செய்ய பெறுகின்ற ஊதியத்தில், 60% மட்டுமே அதே பணியை செய்யும் பெண்களுக்கு வழங்குகின்றனர் என கணக்கெடுப்பு கூறுகிறது. 13% பெண்கள் மட்டுமே உயர் அதிகாரிகளாக இருக்கின்றனர்.

‘அரசியல் அதிகாரமளித்தல்’ என்ற பிரிவில் 9-ஆவது இடத்திலிருந்து 15-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களாக பெண்கள் இருப்பது 11% குறைந்து படு பாதளத்துக்கு சென்றிருக்கிறது. ‘கல்வி அடைவு’ என்ற பிரிவில் மட்டுமே ஒரு இடம் முன்னேறி இருக்கிறது.

 

2015 ஆம் ஆண்டை விட அதிக மழை:தமிழ் நாடு வெதர் மேன் எச்சரிக்கை..!

மைனாரிட்டி அரசை பாதுகாக்கும் நீதிமன்ற உத்தரவு..!

வீடு திரும்பினார் நடராஜன்:எடப்பாடிக்கு நன்றி சொன்னாரா உண்மை என்ன?

தேர்தல் கமிஷனை திணறடிக்கும் தினகரன்:ஆனால்…!

ஒபிஎஸ்- இபிஎஸ் தாக்கல் செய்த 425 போலி ஆவணங்கள்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*