’ஜெ’மரணம் :விசாரணை தாமதம் ஏன்?

Chennai: Prime Minister Narendra Modi pays his last respects to Tamil Nadu's former Chief Minister Jayaram Jayalalithaa at Rajaji Hall in Chennai on Tuesday. PTI Photo / PIB(PTI12_6_2016_000093B) *** Local Caption ***

பன்னீரின் எம்.ஜி,ஆர் நூற்றாண்டு விழா ரத்து…!

இனி கொச்சின் தேவசம் போர்டும் தலித் குருக்களை நியமிக்கும்!

வீடு திரும்பினார் நடராஜன்:எடப்பாடிக்கு நன்றி சொன்னாரா உண்மை என்ன?

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைதியாக இருந்த அதிமுகவினர் பன்னீர்செல்வம் பதவியிழந்த பிறகு சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள். அவ்வப்போது ஜெயலலிதா மரணத்தை கிண்டலும் கேலியும் செய்யும் படி அதிமுக அமைச்சர்களின் பேச்சு அமைந்த நிலையில், ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணைக் கமிஷனும் அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாகவே அவர் விசாரணையை துவங்குவார் என்று செய்திகள் வெளியான நிலையில், துவங்கவில்லை. ஆனால், 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இன்று விசாரணையை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றும் விசாரணை துவங்கவில்லை. விசாரணை எப்போது துவங்கும் என்பதற்கு அரசின் சார்பில் ஒரு பதிலும் இல்லாத நிலையில், இந்த விசாரணைக் கமிஷன் சசிகலாவை குறிவைத்து அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டும் விமர்சனங்களும் பொது வெளியில் எழுந்துள்ள நிலையில், விசாரணைக் கமிஷனின் ரிப்போர்ட் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் விசாரணையை விருப்பத்துக்கு நடத்த முடியாது. ஜெயலலிதா கைரேகை, பன்னீர்செல்வத்தை அமைச்சரவையை வழி நடத்த கவர்னர் பிறப்பித்த உத்தரவில் ஜெயலலிதாவின் ஒப்புதல் இருந்ததா? அப்போது ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தாரா? , எய்ம்ஸ் மருத்துவர்கள் என விசாரணையை சசிகலாவோடு மட்டும் நிறுத்திக் கொள்ள முடியாது. இது தொடர்பாக பலரும் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
முக்கியமாக அப்பல்லோ மருத்துவமனைதான் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறது. உலக தரத்தில் மருத்துவ சிகிச்சையும் கொடுத்து விட்டு இப்போது மருத்துவமனை மீதே சந்தேகமும் கொள்கிறார்கள் என்று பிரதாப் ரெட்டி கவலையில் இருக்கிறார்.
இப்படி ஜெயலலிதா மரணத்தை அரசியலுக்காக பயன்படுத்த நினைக்கும் பன்னீர்செல்வம் , எடப்பாடியின் ஆசைகள் அவர்கள் நினைத்தது போல அமையுமா என்பது கேள்விக்குறிதான். ஆறுமுகச்சாமியின் விசாரணை ஆணையம் துவங்கிய பின்னர் விசாரணை ஆணையத்தில் பல தரப்பும் ஆஜராகும் சூழல் ஏற்படும்.

ஒபிஎஸ்- இபிஎஸ் தாக்கல் செய்த 425 போலி ஆவணங்கள்…!

ரவா கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்க திட்டம்?

தேர்தல் கமிஷனை திணறடிக்கும் தினகரன்:ஆனால்…!

தப்புத் தப்பாய் வந்தேமாதரம் பாடி நெட்டிசன்களிடம் சிக்கிய பாஜக பிரமுகர்… VIDEO..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*