மழை பற்றிய வதந்திகளை பரப்பாதீர்:நம்பாதீர்…!

பன்னீரின் எம்.ஜி,ஆர் நூற்றாண்டு விழா ரத்து…!

இனி கொச்சின் தேவசம் போர்டும் தலித் குருக்களை நியமிக்கும்!

வீடு திரும்பினார் நடராஜன்:எடப்பாடிக்கு நன்றி சொன்னாரா உண்மை என்ன?

பருவமழை பொய்த்து புயல் மழைதான் நமக்கு கடந்த பல ஆண்டுகளாக கிடைத்து வரும் நிலையில், இந்த ஆண்டுதான் வடகிழக்கு பருவமழை சீராக பெய்து வருகிறது. ஆனால் ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் மழையால் சென்னையே மிதப்பது போன்ற பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
தாழ்வான பகுதிகள், ஏரி,குளங்கள், கண்மாய்களை ஆக்ரமித்து ரியல் எஸ்டேட் பேர்வழிகளால் குடியிருப்புகள் ஆக்கப்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை அதன் போக்கில் பெய்கிறது. தண்ணீர் அது போக்கில் ஓடுகிறது. அதன் போக்கிடத்தில் வீடு கட்டியவர்கள் தண்ணீர் வந்து விட்டது என்று குறைபடுவதற்கு முன்னால் நாம் குடியிருக்கும் இடங்கள் பற்றி யோசிக்க வேண்டும்.
ஏரிகள் இயல்பாக இருக்கிறது.
இன்னொரு பக்கம் ஏரிகள் உடைந்து விட்டதாக வதந்திகள் பரப்பப்படுகிறது.

மைனாரிட்டி அரசை பாதுகாக்கும் நீதிமன்ற உத்தரவு..!
இன்று காலை (3.11.2017) நிலவரப்படி பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 231 கன அடியும், சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 289 கன அடியும், செங்குன்றம் ஏரிக்கு விநாடிக்கு 912 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 876 கன அடியும் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
நீர் இருப்பு
இன்று காலை நிலவரப்படி, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 368 மில்லியன் கன அடியும், 881 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 250 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது.
அதே போல், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செங்குன்றம் ஏரியில் 747 மில்லியன் கன அடியும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 749 மில்லியன் கன அடியும் நீர் இருப்பும் உள்ளது.

ஒபிஎஸ்- இபிஎஸ் தாக்கல் செய்த 425 போலி ஆவணங்கள்…!

ரவா கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்க திட்டம்?

தேர்தல் கமிஷனை திணறடிக்கும் தினகரன்:ஆனால்…!

தப்புத் தப்பாய் வந்தேமாதரம் பாடி நெட்டிசன்களிடம் சிக்கிய பாஜக பிரமுகர்… VIDEO..!
சென்னை நிலவரம்
சென்னையில் நேற்று இரண்டரை மணி நேரம் கன மழை பெயதது உண்மைதான் என்றாலும் அது இயல்பு வாழ்க்கையை முடக்கும் அளவுக்கு மழையாக இல்லை. பெரும்பலான இடங்களில் தண்ணீர் அதுவாகவே வடிந்து விட்டது. பள்ளமான பகுதிகளிலும், சுரங்கப்பாதைகளிலும் தேங்கிய நீரை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்துகிறார்கள்.
மழை, வெயில் என்பது இயற்கை நமக்களித்த கொடைகள். நமது விவசாயமும், நீராதாரமும் பாதுகாக்கப்பட இந்த மழையும் அவசியம் நீரும் அவசியம். வெள்ளசேதத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்ற போதும். வீண் வதந்திகளை பரப்பாதீர்கள் அதை நம்பவும் நம்பாதீர்கள்.

தேர்தல் கமிஷனை திணறடிக்கும் தினகரன்:ஆனால்…!

ஒபிஎஸ்- இபிஎஸ் தாக்கல் செய்த 425 போலி ஆவணங்கள்…!

அசத்தலான 108 ஆம்புலன்ஸ் அப்ளிகேசன்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*