WARNING … மொபைல் ஃபோனை தாக்கும் மின்னல்!

அசத்தலான 108 ஆம்புலன்ஸ் அப்ளிகேசன்…!

”எங்கெங்கு காணினும் தண்ணீரடா” -மருத்துவர் ராமதாஸ் மக்களுக்கு சூப்பர் அறிவுரை..!

2015 ஆம் ஆண்டை விட அதிக மழை:தமிழ் நாடு வெதர் மேன் எச்சரிக்கை..!

புதுச்சேரியை அழிக்கத் துடிக்கிறார் கிரண்பேடி:திமுக எம்.எல்.ஏ…!

மைனாரிட்டி அரசை பாதுகாக்கும் நீதிமன்ற உத்தரவு..!

மொபைல் இல்லாமல் இன்று நம்மால் வாழ முடியாது. நம் வாழ்வின் அன்றாட தேவைகளில் ஒன்றாக அது மாறி விட்ட நிலையில், இடி மின்னலுடன் பெய்யும் இந்த மழைக்காலத்தில் சில நேரங்களில் மொபைல் போன் எமனாகவும் மாறி விடுகிறது.

மொபைல் வழியாக மின்னல் தாக்கி  தமிழகத்தில் சிலர் இறந்திருக்கிறார்கள் என்பது இந்த மழை பிரச்சனையில் பேசப்படாத ஒன்று. சென்னையில்,இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு கல்லூரி மாணவர் உட்பட மூன்று பேர் மின்னல் தாக்கி செவ்வாயன்று உயிரிழந்திருக்கின்றனர். இதில், கல்லூரி மாணவர், தன் மொபைல் போனில் பேச முயன்ற போது மின்னல் தாக்கி உயிரிழந்திருக்கிறார் என்பது வேதனைக்குரியதாக இருக்கிறது.

வீடு திரும்பினார் நடராஜன்:எடப்பாடிக்கு நன்றி சொன்னாரா உண்மை என்ன?

தேர்தல் கமிஷனை திணறடிக்கும் தினகரன்:ஆனால்…!

ஒபிஎஸ்- இபிஎஸ் தாக்கல் செய்த 425 போலி ஆவணங்கள்…!

மொட்டை மாடியில் நின்று மழையில்,மொபைல் போன் பேசிக் கொண்டிருந்த நபர் மின்னல் தாக்கி உயிரிழப்பது இது முதல் முறை அல்ல. மழை வெள்ளத்தாலும், மின் கசிவாலும் நேரடியாக மக்கள் உயிரிழக்கும் அதே வேளையில், மொபைல் ஃபோனில் பேசிக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமானதாகவே இருக்கிறது. ஏறத்தாழ ஆறு பேர் கடந்த ஒரு மாதத்தில் மொபைல் ஃபோனில் பேசிக் கொண்டிருந்த போது மின்னர் தாக்கி உயிரிழந்திருக்கின்றனர். ஆனாலும் இது குறித்து முறையான விழிப்புணர்வு உண்டாக்கப்படவில்லை.

மழைக்காலத்தில், எந்த விதமான  டிவி கேபிள் போன்ற உலோகத்தையும் தொடாமல் இருப்பது அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது. இதனால், தான் புயல் நேரத்தில் எல்லாம் லேண்ட்லைன் ஃபோனை கூட பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

மின்னல் வெட்டும் போது, மேகத்தில் இருக்கும் மின் சார்ஜ்கள் மேகத்திலிருந்து ஈர காற்று வழியாக மண்ணிற்குள் பாய்கின்றன. இந்நிலையில், குறுக்கிடும் பொருட்களில் உலோகமோ அல்லது மின் சார்ஜ்களை ஈர்க்கும் சாதனமோ இருக்கும் பட்சத்தில் அதன் வழியே மின்சாரம் பாய்கின்றது. இம்மாதிரியான விபத்துக்களிலிருந்து தப்பிக்க, திறந்தவெளியில் நின்று கொண்டு ஃபோன் பேசுவதை தவிர்க்கலாம்.

வீட்டின் மொட்டை மாடியில், திறந்த வெளியில், உயரமான மரங்களின் கீழே நிற்பதையும், அப்படி நின்று கொண்டு மொபைல் பேசுவதையும் மழைக்காலத்தில் தவிர்ப்பது நல்லது..!

ராகுலுக்கு நன்றி சொல்லிய நிர்பயாவின் அம்மா!

ஜிம்முக்குச் சென்று கும்மென்று உடலை வைத்திருக்கும் ஸ்டாலின்:வைரல் வீடியோ..!

ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா?

ஜோசப் விஜய் தமிழனா?: காவிகளின் கோமாளித்தனமான பாடல் (#வீடியோ_உள்ளே)

தப்புத் தப்பாய் வந்தேமாதரம் பாடி நெட்டிசன்களிடம் சிக்கிய பாஜக பிரமுகர்… VIDEO..!

சசிகலா புஷ்பா முன் மண்டியிட்ட அதிமுக நவநீதகிருஷ்ணனை குறிவைப்பது ஏன்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*