700 ஏக்கருக்கு ஆக்ரமிக்கப்பட்ட மதுராந்தகம் ஏரி…!

சசிக்கு தெரியாமல் ‘ஜெ’ கைரேகை மோசடி? அம்பலமானது உண்மை..!

கமல்ஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும்: இந்து மஹாசபை..!

குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா..!

’ஜெ’மரணம் :விசாரணை தாமதம் ஏன்?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான ஏரியான மதுராந்தகம் ஏரி நிரம்பி வழிவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது மதுராந்தகம் நகராட்சி.நகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட மதுராந்தகம் ஏரி. மாவட்டத்தின் மிக பெரிய ஏரியாக திகழ்கிறது.இதன் கரையின் நீளம் 12,960 அடிகள், மற்றும் இது 2908 ஏக்கர்கள் பரப்பளவு கொண்டது. நீர் 2231.48 ஏக்கர்கள் பரவியும், 609 மெட்ரிக் கன அடிகள் கொள்ளளவும் கொண்டது.உத்தம சோழன் காலத்தில் கட்டப்பட்டது.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட ஆட்சியர் லியோனலால் 1798ம் ஆண்டு கரைகள் வலுப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடலோர மற்றும் வட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது.கடந்த ஒருவாரமாக நல்ல பெய்து வந்தது.இந்நிலையில் திடீரென கடந்த இரண்டு நாட்களாக கடும் கனமழை பெய்து வந்ததால் மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இந்நிலையில் திடீரென கடந்த இரண்டு நாட்களாக கடும் கனமழை பெய்து வந்ததால் மதுராந்தகம் ஏரி முழுகொள்ளவையும் எட்டி காஞ்சிபுர மாவட்ட மக்களை கதி கலங்க வைத்துள்ளது.

பன்னீரின் எம்.ஜி,ஆர் நூற்றாண்டு விழா ரத்து…!

இனி கொச்சின் தேவசம் போர்டும் தலித் குருக்களை நியமிக்கும்!

வீடு திரும்பினார் நடராஜன்:எடப்பாடிக்கு நன்றி சொன்னாரா உண்மை என்ன?

21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏரி நிரம்பினால் மக்கள் ஏன் அச்சப்பட வேண்டும் என்றால் அது ரியல் எஸ்டேட் கொள்ளையர்களும், கல்விக் கொள்ளையர்களும் மதுராந்தகம் ஏரியை கபளீகரம் செய்து விட்டார்கள். 2411 ஏக்கர் பரப்பளவில் மதுராந்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதி உள்ளது. மதுராந்தகம் நகரில், 2853 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரியை நம்பியே விவசாயம் நடைபெறுகின்றது. மதுராந்தகம் ஏரியிலிருந்து 18 கிராமங்களில் உள்ள 8262 ஏக்கர் நிலங்கள் நீர்ப்பாசனம் பெறுகின்றன. இரண்டாம் போகத்தில் 1515 ஏக்கர் பரப்பளவு நிலமும், மூன்றாம் போகத்தில் 530 ஏக்கர் விளைநிலமும் பயன் பெறும் நன்மைகள் இருந்தது.

3111 ஏக்கர் பரப்பளவில் நன்செய் நிலம் இருப்பதாகவும், அங்கு வீடுகள் கட்டக்கூடாது என்றும் 1985ல் மதுராந்தகம் நகராட்சியில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்தவர்கள் நன்செய் நிலங்களில் வீடுகட்ட அனுமதி கொடுத்து விட்டார்கள். இதனால் அந்தப்பகுதிகளில் தண்ணீர் தேங்குகின்றது. மேலும், 40 வருடங்களாகவே மதுராந்தகத்தின் ஏரி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றது. 700 ஏக்கர் பரப்பளவில் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது. மதுராந்தகம் ஏரி உடையும் நிலையிலும் இல்லை. ஆனால்  நிரம்பி வழியும் வெள்ளம் ஊருக்குள் செல்ல இந்த ஆக்ரமிப்புகளே காரணம்.

ஒபிஎஸ்- இபிஎஸ் தாக்கல் செய்த 425 போலி ஆவணங்கள்…!

ரவா கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்க திட்டம்?

தேர்தல் கமிஷனை திணறடிக்கும் தினகரன்:ஆனால்…!

தப்புத் தப்பாய் வந்தேமாதரம் பாடி நெட்டிசன்களிடம் சிக்கிய பாஜக பிரமுகர்… VIDEO..!

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*