அரசு நிர்வாகம் செயலிழந்ததை வரைந்தேன்: ஜாமினில் வந்த பாலா

கலைஞர் கருணாநிதியை ஏன் மோடி சந்திக்கிறார்?

மூழ்கிய பயிற்கள் :கவலையில் டெல்டா விவசாயிகள்..!

700 ஏக்கருக்கு ஆக்ரமிக்கப்பட்ட மதுராந்தகம் ஏரி…!

கந்துவட்டி கொடுமை குறித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு இசக்கி முத்து என்பவரின் குடும்பம் தீக்குளித்து இறந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கந்துவட்டி கொடுமை குறித்து பலமுறை இசக்கி முத்து புகார் அளித்தும் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததே இதற்கு முக்கியமாகன காரணம் என்று கூறப்பட்டது. இசக்கி முத்து குடும்பமே தீக்கிரையான பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த அரசாங்க அதிகாரியையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் கேலிச்சித்திரம் வரைந்து வெளியிட்டார் கார்ட்டூனிஸ்ட் பாலா. அதற்கு நெல்லை ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் நேற்று சென்னையில் பாலா கைது செய்யப்பட்டார்.

அடையாறு ஆக்கிரமிப்பு: தமிழக அரசு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

இன்று நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாலாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார் மாவட்ட நீதிபதி. ஜாமினில் வந்த பாலா, “அரசு நிர்வாகம் செயலிழந்ததை தான் வரைந்தேன், மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை. பாஜக-வின் பினாமியாக செயல்படும் எடப்பாடி அரசின் தூண்டுதலால் தான் நெல்லை ஆட்சியர் புகார் அளித்திருப்பார். இந்த கேலிசித்திரத்தை வரைந்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று தெரிவித்தார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*