கலைஞர் கருணாநிதியை ஏன் மோடி சந்திக்கிறார்?

மூழ்கிய பயிற்கள் :கவலையில் டெல்டா விவசாயிகள்..!

700 ஏக்கருக்கு ஆக்ரமிக்கப்பட்ட மதுராந்தகம் ஏரி…!

விழித்திரு: மிகத்தைரியமான அரசியல் த்ரில்லர் – சா.ஜெ.முகில் தங்கம்

‘தினத்தந்தி’ பவள விழாவுக்காக சென்னைக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை திடீரென சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது தமிழக மக்களிடமும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதியை பிரதமர் மோடி சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தான் டாக்டர் ராமதாஸ், கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்துத்துவ பாஜக-வை எதிர்க்கும் கட்சியாக நேரடி களத்தில் இருக்கிறது திமுக. கலைஞர் கருணாநிதியின் சட்டசபை வைர விழா வைர நிகழ்ச்சியில் அதற்கான அடித்தளத்தை அமைத்தது.

மோடியின் சந்திப்பு குறித்து திமுக வட்டம், “பாஜக-வுடன் நீண்டகால தொடர்பில் இருக்கும் கருணாநிதியின் உறவினர்கள் சிலர், மோடி அவரை சந்திக்க வேண்டும் என விரும்பியுள்ளனர். எனவே அருண் ஜேட்லி, மோடியிடம் கருணாநிதியை சந்திக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார். இதனை ஏற்று கருணாநிதியை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக” தெரிவித்துள்ளனர்.

சசிக்கு தெரியாமல் ‘ஜெ’ கைரேகை மோசடி? அம்பலமானது உண்மை..!

கமல்ஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும்: இந்து மஹாசபை..!

குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா..!

’ஜெ’மரணம் :விசாரணை தாமதம் ஏன்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*