கார்டூனிஸ்ட் பாலா: இசக்கி முத்து வீட்டிற்கு சென்று அஞ்சலி (#video)

நெல்லையில் கந்துவட்டி கொடுமைக்கு பலியான இசக்கிமுத்து குடும்பம் தொடர்பாக விமர்சன கார்ட்டூன் வரைந்த கார்டூனிஸ்ட் பாலா நேற்று கைது செய்யப்பட்டார். கருத்து சுதந்திரத்தை பறிக்கும் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இன்று காலை ஜாமினில் வெளியே வந்த பாலா, “அரசு நிர்வாகம் செயலிழந்ததை தான் வரைந்தேன், மற்றபடி உள்நோக்கம் ஏதும் இல்லை” என்று தெரிவித்தார்.

தற்போது கார்டூனிஸ்ட் பாலா, அவருக்காக வாதாடிய வக்கீல் வாஞ்சிநாதன் மற்றும் பத்திரிகையாளர் அருள் எழிலன் ஆகியோர் இசக்கி முத்து இல்லத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*