திருவண்ணாமலை: விவசாயியை குண்டர்களை ஏவி கொலை செய்த பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம்

அடையாறு ஆக்கிரமிப்பு: தமிழக அரசு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கலைஞர் கருணாநிதியை ஏன் மோடி சந்திக்கிறார்?

மூழ்கிய பயிற்கள் :கவலையில் டெல்டா விவசாயிகள்..!

திருவண்ணாமலை: கடனை வசூலிக்க, பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் அனுப்பிய குண்டர்கள் தாக்கியதில், விவசாயி இறந்தார். இதனால், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த போந்தை கிராமத்தை சேர்ந்வர் ஞானசேகரன் (விவசாயி). இவர், சாத்தனூர் கிராமத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில், நான்கு ஆண்டுகளுக்கு முன் டிராக்டர் வாங்க கடன் பெற்றிருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக, முறையாக கடன் செலுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டு, கடன் செலுத்த முடியவில்லை. இவருக்கு, இரண்டு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் பாக்கி தொகை நிலுவையில் இருந்தது.

இதுகுறித்து வங்கி நிர்வாகம், கடனை செலுத்துமாறு ஞானசேகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. கடந்த ஆண்டு கடும் வறட்சியால், பயிர்கள் கருகி விட்டன. விரைவில், பாக்கி தொகையை கட்டி விடுகிறேன் என வங்கி நிர்வாகத்திடம் அவர் தெரிவித்தார். இதை ஏற்காத வங்கி நிர்வாகம், செங்கம் அடுத்த நாச்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த மோகன்தாஸ் மற்றும் வெங்கடபதி ஆகிய இரு குண்டர்களை அனுப்பி டிராக்டரை பறிமுதல் செய்து வர நேற்று முன்தினம் அனுப்பியது. குண்டர்கள், அவரது வீட்டிற்கு சென்று, டிராக்டரை பறிமுதல் செய்தனர். அப்போது ஞானசேகரன், ‘நீங்கள் யார் என, எனக்கு தெரியாது; வங்கி மேலாளர் அல்லது போலீசாரை அழைத்து வாருங்கள்’ என்று கூறினார். இதனால், ஞானசேகரனை, அவர்கள் சரமாரியாக தாக்கியதில், மயக்கமடைந்து, நெஞ்சு வலி ஏற்பட்டு தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துமவனையில் நேற்று முன்தினம் மாலை சேர்க்கப்பட்ட நிலையில், அன்று இரவு, 9:30 மணிக்கு இறந்தார். இந்த தகவல் விவசாயிகளிடையே பரவியதால், மருத்துவமனை முன் குவிந்து, அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, குண்டர்களை வைத்து, விவசாயியை அடித்து கொலை செய்த வங்கி ஊழியர்கள் மற்றும் குண்டர்களை, உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயி குடும்பத்திற்கு, நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். சாத்தனூர் ஸ்டேட் வங்கி மற்றும் போந்தை கிராமத்தில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தானிப்பாடி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோடி கோடியாக கடன் வாங்கியவர்களை கண்டுகொள்ளாமல் விடும் அரசாங்கம், அடித்தட்டு மக்கள் மீதே தன் அதிகாரத்தை செலுத்தி வருகிறது.

சசிக்கு தெரியாமல் ‘ஜெ’ கைரேகை மோசடி? அம்பலமானது உண்மை..!

கமல்ஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும்: இந்து மஹாசபை..!

குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா..!

’ஜெ’மரணம் :விசாரணை தாமதம் ஏன்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*