19 கோடி எங்கே போனது? : ஸ்டாலின்

பிறந்தநாள் கொண்டாட மறுத்த கமல்ஹாசன்?

அடையாறு ஆக்கிரமிப்பு: தமிழக அரசு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தப்புத் தப்பாய் வந்தேமாதரம் பாடி நெட்டிசன்களிடம் சிக்கிய பாஜக பிரமுகர்… VIDEO..!
சென்னை: ஆதனூர் – அடையாறு கால்வாய் தூர் வாரும் பணி நடக்கவில்லை. அதற்கு ஒதுக்கிய 19 கோடி ரூபாய் எங்கே போனது என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

அரசு நிர்வாகம் செயலிழந்ததை வரைந்தேன்: ஜாமினில் வந்த பாலா

காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரத்தில் அடையாறு கால்வாயை தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், “முடிச்சூர், வரதராஜபுரம், கூடுவாஞ்சேரியில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆதனூர் – அடையாறு கால்வாயை தூர் வார வேண்டும். கால்வாயை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போதைய அரசு இதற்கு 19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்திருந்தது. கடந்த மார்ச் 23-ஆம் தேதி இதன் பணிகள் துவங்கியதாகவும், அதில் 45% முடிவடைந்து விட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், எந்த பணிகளும் நடைபெறவில்லை. ஒதுக்கீடு செய்யப்பட்ட 19 கோடி ரூபாய் எங்கே போனதென்று தெரியவில்லை. தற்போதைய குதிரை பேர அரசு, வெறும் அறிவிப்புகளை தான் வெளியிடுகிறது. இந்த அரசு மக்கள் கவலைகளை கவனத்தில் கொள்ளவில்லை. வரும் கால கட்டத்தில், ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்று பேசினார்.

திருவண்ணாமலை: விவசாயியை குண்டர்களை ஏவி கொலை செய்த பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*