தேர்வை தள்ளிப்போட 2-ஆம் வகுப்பு குழந்தையை கொலை செய்த சர்வதேச பள்ளி மாணவன்..!

விரைவில் அதிமுக தலைமைக் கழகத்திற்கு பூட்டு..!

காற்று மாசுபாடு:வாகனங்கள் மோதும் விடியோ..!

டிஜிட்டல்வாசி: இந்த நாள் மற்றுமொரு தரித்திரம்.. ச்சை இது சரித்திரம்!

பணமதிப்பு நீக்கத்தால் பாலியல் தொழில் குறைந்திருக்கிறது…!

மோடி கருணாநிதி சந்திப்பு:ஸ்டாலின் விளக்கம்…!

ரையன் இண்டர்நேஷனல் பள்ளியிள் படித்து வந்த எட்டு வயது இரண்டாம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளியாக பதினொன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டிருக்கிறான். ஒரு பரீட்சையையும், ஆசிரியர் பெற்றோர் சந்திப்பையும் தள்ளி போடவே மாணவன் இவ்வாறு செய்திருக்கிறான் என சிபிஐ தெரிவித்திருக்கிறது.

“சிசிடிவி காணொலிகள்,தடயவியல் சாட்சியங்களை வைத்து நாங்கள் இந்த முடிவிற்கு வந்திருக்கிறோம்” என சிபிஐயின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் சிறுவனின் தந்தை தன்னுடைய மகன் ‘நிரபராதி’ என்று சொல்வதாக செய்தி சேனல் நிறுவனம் ஒன்று தெரிவித்திருக்கிறது.

ரையன்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியின் கழிப்பறைக்கு வெளியே இரண்டாம் வகுப்பு மாணவன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு, இந்த புதிய திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது. இந்த கொலை குறித்து தனியே விசாரணை நடத்த வேண்டும் என கொலை செய்யப்பட்ட சிறுவனின் தந்தை உச்ச நீதிமன்றத்துக்கு சென்றிருந்தார்.

முன்னராக, இந்த வழக்கில் 42 வயதான அஷோக் குமார் எனும்  பள்ளிப்பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டார். சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம் என குர்காவுன் காவல் துறை முன் வைத்த கோணத்தை முற்றிலுமாக மறுத்திருக்கிறது சிபிஐ.

நடத்துனர் கைதானதையொட்டி பள்ளி வாகன ஓட்டிகளை ஊடகங்கள் கொடூராமாக சித்தரித்தது குறிப்பிடத்தக்கது.

கட்சி துவங்கவும் 30 கோடி பட்ஜெட் போட்ட கமல்:அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

பணமதிப்பிழப்பு தோல்வி:நஷ்ட ஈடு கேட்கும் அச்சகங்கள்…!

மாற்றத்தை ஏற்படுத்துவாரா கமல்ஹாசன்?

காவி நிற கத்திரி: தணிக்கை குழு அராஜகம்

கார்டூனிஸ்ட் பாலா: இசக்கி முத்து வீட்டிற்கு சென்று அஞ்சலி (#video)

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*