பணமதிப்பு நீக்கத்தால் பாலியல் தொழில் குறைந்திருக்கிறது…!

மோடி கருணாநிதி சந்திப்பு:ஸ்டாலின் விளக்கம்…!

பணமதிப்பு நீக்கம் எனும் பேரிடர் இந்தியாவை தாக்கி இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இந்தியா அதன் தாக்கத்தில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை என்பது யதார்த்தம். இன்றும் கூட பல சிறு வணிகர்களும், கடைக்காரர்களும் மோடி அரசையும்,பணமதிப்பு நீக்கத்தையும் விமர்சித்தபடியே தான் இருக்கின்றனர்.

இவ்வேளையில், பல தலைவர்களும் இந்த நடவடிக்கை குறித்த தங்கள் கருத்தை சொல்லி வருகின்றனர். அவற்றுள் சில : –

Financial times – ல் ராகுல் காந்தி எழுதியிருக்கும் பத்தி!

ஒரு வருடத்திற்கு முன்னர், நரேந்திர மோடி இந்தியன் ரிசர்வ் வங்கியை புறக்கணித்து, தன்னுடைய அமைச்சரவையை பூட்டி வைத்து, நான்கு மணி நேர கால அவகாசம் கொடுத்து பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தார். ஒரே இரவில் இந்திய பணத்தின் 86% மதிப்பு சுழற்சியில் இருந்து நீக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 1.5 மில்லியன் மக்கள் பணமதிப்பு நீக்கம் காரணமாக தங்கள் வேலையை இழந்திருப்பதாக ‘தி செண்டர் ஃபார் மானிட்டரிங் இண்டியன் எகானமி சொல்லியிருக்கிறது’.

மோடியை போன்ற ஜனநாயகத்தால் தோன்றும் சர்வாதிகாரிகள் உருவாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று – பெருகியிருக்கும் தொலை தொடர்பு இணையம் ; இரண்டு ; சர்வதேச வேலை வாய்ப்பு சந்தையில் சீனாவின் ஆதிக்கம் ஓங்குவது.

இதற்காக கொடுக்கப்படும் விலை – சீன மக்கள் பேசுவதற்கு சுதந்திரம் இல்லாமல் இருக்கிறார்கள்; எதிர்ப்பை தெரிவிப்பவர்கள் மற்றும் கேள்வி கேட்பவர்கள் கொடுரமாக தண்டிக்கப்படுகிறார்கள். இந்தியா இதை பின்பற்ற கூடாது.

பணமதிப்பு நீக்கம் எனும் பெரிய ஊழல் தொடர்பாக விசாரணை வேண்டும் : மமதா பானர்ஜி

பணமதிப்பு நீக்கம் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கும் மமதா பானர்ஜி, மத்திய அரசை விமர்சித்து, “ பணமதிப்பு நீக்கம் ஒரு மிகப் பெரிய ஊழல். திரும்பவும் சொல்கிறேன், பணமதிப்பு நீக்கம் ஒரு மிகப் பெரிய ஊழல். முறையாக விசாரணை செய்தால், இது நிரூபிக்கப்படும். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பணமதிப்பு நீக்கம் கொண்டுவரப்படவிலை. அரசியல்வாதிகளின் நலனுக்காக கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றவே பணமதிப்பு நீக்கம் கொண்டு வரப்பட்டது” என்று எழுதியிருக்கிறார்.

கருப்பு பணத்தை குவித்தா வைத்திருப்பார்கள் ? : ஜான் ட்ரீஸ்!

Firstpost தளத்திற்கு பேட்டியளித்த ஜான் ட்ரேஸே , “ பல கோட்பாடுகள் முன் வைக்கப்படுகின்றன. ஆனாலும், ஒரு பிரதமர் நாட்டின் பொருளாதாரத்தோடு ஏன் இப்படி ஒரு ரிஸ்கை எடுப்பார் என எதுவுமே விளக்கவில்லை. கருப்பு பணம் ஓரிடத்திலேயே குவிந்து கிடக்கும் எனும் கட்டுக்கதையை அவர் நம்பியதாக தான் நான் யூகிக்கிறேன்.

பொருளாதாரத்தில் கருப்பு பணம் என்பது சட்ட முறைகேடாக சம்பாதிக்கப்பட்டவை.அது ஓடிக் கொண்டிருப்பது , ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருப்பது அல்ல. முறைகேடான சம்பாத்தியம் ஒரு இடத்தில் நிலையாக இருந்து குவிந்து கிடக்காது. அது ஜாகுவார் கார் வாங்குவதற்கும், துபாயில் ஷாப்பிங் செய்வாதற்கும், பிரம்மாண்டமான திருமணங்களுக்கு செலவு செய்யவும் பயன்பட்டுக் கொண்டே இருக்கும். யதார்த்தத்தில் கொஞ்சம் கருப்பு பணம் பணத்தாள்களாக வைக்கப்பட்டிருக்கலாம் ஆனால் சட்ட முறைகேடான சம்பாத்தியத்தை ஒழிப்பதாக சொல்லி இப்படி ஒரு நடவடிக்கையை எடுப்பதால் பெரிய பயன் எதுவும் இல்லை”

பணமதிப்பு நீக்கத்தால் விபச்சாரம் (பாலியல் தொழில்)  குறைந்திருக்கிறது : ரவி ஷங்கர் பிரசாத்

பணமதிப்பு நீக்கம் நடந்து  ஒரு ஆண்டு முடிந்திருக்கும் நிலையில், பெண்கள் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுவதும்,பாலியல் தொழிலும் வெகுவாரியாக குறைந்திருக்கிறது என மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் சொல்லியிருக்கிறார். அது மட்டுமின்றி, காஷ்மிரில் நடக்கும் கல்லெறியும் சம்பவங்களும், நக்சலைட்டுகளின் நடவடிக்கையும் குறைந்திருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

“இந்தியாவில் சதை தொழில் குறைந்திருக்கிறது. பெண்கள் கடத்தப்படுவதும் குறைந்திருக்கிறது. பாலியல் தொழிலினால், நேபாளத்திற்கும் பங்களாதேஷிற்கும் பெருமளவு பணம் சென்று கொண்டிருக்கும். தற்போது அது குறைந்திருக்கிறது”என்று சட்ட அமைச்சரான ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்திருக்கிறார்.

கட்சி துவங்கவும் 30 கோடி பட்ஜெட் போட்ட கமல்:அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

பணமதிப்பிழப்பு தோல்வி:நஷ்ட ஈடு கேட்கும் அச்சகங்கள்…!

மாற்றத்தை ஏற்படுத்துவாரா கமல்ஹாசன்?

காவி நிற கத்திரி: தணிக்கை குழு அராஜகம்

கார்டூனிஸ்ட் பாலா: இசக்கி முத்து வீட்டிற்கு சென்று அஞ்சலி (#video)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*