மோடி கருணாநிதி சந்திப்பு:ஸ்டாலின் விளக்கம்…!

கட்சி துவங்கவும் 30 கோடி பட்ஜெட் போட்ட கமல்:அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

பணமதிப்பிழப்பு தோல்வி:நஷ்ட ஈடு கேட்கும் அச்சகங்கள்…!

மாற்றத்தை ஏற்படுத்துவாரா கமல்ஹாசன்?

காவி நிற கத்திரி: தணிக்கை குழு அராஜகம்

கார்டூனிஸ்ட் பாலா: இசக்கி முத்து வீட்டிற்கு சென்று அஞ்சலி (#video)

“பிரதமர் மோடியை எந்த இடத்திலும், எந்த சூழலிலும் அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ள மாட்டோம்” என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த 6-ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வில் இருக்கும் கருணாநிதியை சந்தித்தார். இச்சந்திப்புக்கு அரசியல் வண்ணம் அடித்து பல செய்திகள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரப்பட்ட நிலையில், இன்று திமுக நடத்திய போராட்டத்தில் அந்த சந்திப்பு தொடர்பாக பேசியுள்ளார் ஸ்டாலின்.
புழக்கத்தில் இருந்த 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை கருப்பு தினமாக எதிர்க்கட்சிகள் அறிவித்த நிலையில். திமுக பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தி வருகிறது.மதுரையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. அதில் பேசிய ஸ்டாலின்:-
“ ரேஷன் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து 6-ஆம் தேதி போராட்டம் அறிவித்தோம். உடனே சென்னை போலீஸ் அதிகாரிகள் அறிவாலயத்திற்கு தொடர்பு கொண்டு “நீங்கள் போராட்டம் அறிவித்துள்ள 6-ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். ஆகவே போராட்டத்தை மாலை நேரத்திற்கு மாற்றி வையுங்கள்” என்றார்கள். “மாலை நேரத்தில் ரேஷன் கடைகள் இயங்காது. பிரதமர் சென்னையில் செல்கிற இடங்களில் இருக்கும் ரேஷன் கடைகளில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த மாட்டோம்” என்று பதில் கூறினோம். பின்னர் மழை காரணமாக போராட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறோம். பிரதமர் மோடி எங்கள் வீட்டுக்கு வருகிறார் என்பதெல்லாம் எனக்கு முன்கூட்டியே தெரியாது. முதுபெரும் திராவிட சமுதாய தலைவரை பிரதமர் சந்தித்து உடல் நலம் விசாரித்ததை வைத்து என்ன எல்லாமோ எழுதுகிறார்கள். “மோடியை அரசியலுக்கு எந்த நேரத்திலும் எந்த சூழலிலும் நாங்கள் பயன்படுத்த மாட்டோம்” கலைஞர் உடல் நலிவுற்று இருப்பதால் மூப்பு காரணமாக ஓய்வுக்கு ஆளாகியிருந்த நிலையில் நான் துபாயில் இருந்தேன். 5-ஆம் தேதி என்னை தொடர்பு கொண்டு சென்னைக்கு வரும் மோடி கருணாநிதியை சந்திக்க விரும்புகிறார் என்று சொன்னார்கள். நான் 5-ஆம் தேதி இரவே கிளம்பி சென்னை வந்தேன்.வந்தவர் கலைஞரிடம் “நீங்கள் இங்கே இருந்தால் உங்களை ஓய்வெடுக்க விடமாட்டார்கள். டெல்லி வாருங்கள் எங்கள் வீட்டில் வைத்து உங்களை கவனித்துக் கொள்கிறேன்” என்றெல்லாம் பிரதமர் மோடி சொன்னது உண்மைதான். ஆனால் உடல் நலம் குன்றிய முதியவரை ஒரு பிரதமர் சந்தித்ததை ஊதிப்பெருக்கி திரித்து எழுதுகிறார்கள். உங்கள் கனவு ஒரு போதும் பலிக்காது” என்று பேசினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*