இரட்டை இலை வழக்கை வாபஸ் பெறக்கோரி தினகரனுக்கு விடப்பட்ட மிரட்டல்?

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை – அசோசியேடட் பிரஸ்

“யாரைக்கண்டும் பயமில்லை” -தினகரன்..!

சசிகலா தினகரனுக்கு சொந்தமான 160 இடங்களில் ரெய்ட்…!

ரெய்டு: ஒரு வாரத்துக்கு முன்னாடியே எதிர்பார்த்தேன், லேட்டா வந்திருக்கீங்களே?

ஜெயா டிவியை முடக்க திட்டம்: ரெய்ட் விரிவான பின்னணி..!

இரட்டை இலை சின்னத்தை ஒபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு வழங்கி அதிமுகவோடு பாஜக கூட்டணி அமைத்து சரிபாதி தொகுதிகளில் பாஜக போட்டியிடுவதோடு. கூட்டணியின் அச்சாரமாக ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக போட்டியிடும் என்பதுதான் டெல்லி பிக்பாஸ் அதிமுகவின் ஒபிஎஸ்- இபிஎஸ் அணிகளோடு பேசி முடிக்கப்பட்ட விஷயம்.
டிசம்பருக்குள் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலை அறிவித்து நடத்தியாக வேண்டும். இன்னும் சில நாட்களுக்குள் இரட்டை இலை சின்னத்தை ஒபிஎஸ்-இபிஎஸ் அணியினருக்கு வழங்கியாக வேண்டும் என்ற நிலையில், தினகரன் இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். ஒருவேளை தேர்தல் கமிஷன் ஒபிஎஸ் அணிக்கு இரட்டை இலையை வழங்கி விட்டாலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தயாராகி விட்டார் தினகரன். அதிலும் நல்ல தீர்ப்பு வரா விட்டால் தனி அணியாகவே களமிரங்கி இவர்களை பதம் பார்த்தே தீர்வது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார் தினகரன்.
இரட்டை இலையோடு முடித்து விடாமல் கட்சி அலுவலகத்தை மீட்கவும் தினகரன் அணி தயாராகி வந்த நிலையில், ஆட்சிக்கு எதிராக மன உணர்வு தமிழகத்தில் அதிகரித்துச் செல்வது ஒரு பக்கம் இருக்கும் நிலையில், தினகரனின் செல்வாக்கு கட்சிக்குள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களுக்கும் பேரம் பேசியும் அவர்கள் படியவில்லை. அதனால்தான் தினகரனின் வலதுகரமான புகழேந்தி வீட்டில் ரெய்ட் அடித்து இனியும் தாமதித்தால் உங்களை நிம்மதியாக இருக்க விட மாட்டோம் என்று விடுக்கப்பட்ட எச்சரிக்கைதான் இந்த ரெய்ட்.
”உண்மையில் இந்த ரெய்டை முன்பே எதிர்பார்த்த சசிகலா தரப்பு ஆவணங்கள் எதையும் வீடுகளில் வைக்கவில்லை. அது போல தங்களுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களின் கணக்கு வழக்குகளையும் முறையாக தணிக்கை செய்து வருமானவரி கட்டியிருக்கிறார்கள் மோடியையும், தமிழகத்தை ஆளும் ஒபிஎஸ்- இபிஎஸ் குழுவையும் பகைத்துக் கொண்ட நிலையில் வருமானவரித்துறையினர் வருவார்கள் என்பது குழந்தைக்குக் கூட தெரியும். அதற்கு எல்லாம் தயாராகவே இருந்தோம்” என்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.

#வருமானவரி_ரெய்ட் #சசிகலா_தினகரன்
#ITRaid #JayaTV #Sasikala

சசிகலா தினகரனுக்கு சொந்தமான 160 இடங்களில் ரெய்ட்…!

விரைவில் அதிமுக தலைமைக் கழகத்திற்கு பூட்டு..!

தேர்வை தள்ளிப்போட 2-ஆம் வகுப்பு குழந்தையை கொலை செய்த சர்வதேச பள்ளி மாணவன்..!

காற்று மாசுபாடு:வாகனங்கள் மோதும் விடியோ..!

டிஜிட்டல்வாசி: இந்த நாள் மற்றுமொரு தரித்திரம்.. ச்சை இது சரித்திரம்!

பணமதிப்பு நீக்கத்தால் பாலியல் தொழில் குறைந்திருக்கிறது…!

மோடி கருணாநிதி சந்திப்பு:ஸ்டாலின் விளக்கம்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*