ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை – அசோசியேடட் பிரஸ்

#Blackmail politics: ஜெயா டிவியை முடக்க திட்டம்: ரெய்ட் விரிவான பின்னணி..!

“யாரைக்கண்டும் பயமில்லை” -தினகரன்..!

சசிகலா தினகரனுக்கு சொந்தமான 160 இடங்களில் ரெய்ட்…!

ரெய்டு: ஒரு வாரத்துக்கு முன்னாடியே எதிர்பார்த்தேன், லேட்டா வந்திருக்கீங்களே?

(அசோசியேடட் பிரஸ் வெளியிட்டிருக்கும் கட்டுரையின் குறுகிய வடிவம்)

இலங்கையில் போர் முடிந்த போது, அவன் தன்னுடைய பதின்பருவத்தில் தான் இருந்தான். ஆனால், ‘சாட்சியம் #205’ என்று அழைக்கப்படும் அவன் கடந்த வருடம் மேலும் ஒரு கொடூரமான வன்முறையை எதிர்கொண்டான்.

தற்போதைய இலங்கை அரசின் கீழ் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோரில் அவனும் ஒருவன். இதுவரை வெளியிடப்படாத இவர்களின் கதை, 2009 ல் முடிவுக்கு வந்த ரத்தக்கறை நிறைந்த போரின் பிம்பங்களை கண் முன் நிறுத்துகிறது.

தி அசோசியேடட் பிரஸுக்கு தங்களுடைய கதைகளை சொல்ல ஒத்துக் கொண்ட இந்நபர்கள், தங்கள் கால்களிலும், மார்பிலும்,முதுகிலும் இருக்கும் தழும்புகளையும் புகைப்படமாக்கவும் ஏற்றுக் கொண்டார்கள். தி அசோசியேடட் பிரஸ் 30 மனநல,மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்து, 20 நபர்களிடம் பேட்டி கண்டது. தமிழ் புலிகள் புரட்சி குழுவை மீண்டும் உருவாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் 2016 தொடக்கத்தில் இருந்து இந்த வருட ஜூலை வரை துன்புறுத்தப்பட்டதாக சொல்கிறார்கள்.

இலங்கை அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்கள்.

“ இதில் இராணுவத்திற்கு எந்த பங்கும் இல்லை. இதில் காவல்துறையினரும் ஈடுபடவில்லை என்பதை உறுதியாக சொல்கிறேன். இப்போது அவர்களை துன்புறுத்த வேண்டும் என்ற தேவை எங்களுக்கு இல்லை” என இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் மஹேஷ் சேனநாயகே அசோசியேட் பிரஸ்ஸிடம் சொல்லியிருக்கிறார்.

இலங்கையில் இருக்கும் தற்போதைய அரசு 2015 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது. நெடுநாட்களாக உறுதியளிக்கப்பட்டிருந்த சீர்திருத்தங்களை எல்லாம் இந்த புதிய தலைமை கொண்டு வரும் என பலர் நம்பினார்கள்.

தென் ஆஃப்ரிக்காவை சேர்ந்த மனித உரிமைகள் அதிகாரியான பியர்ஸ் பிகோய், இந்த அளவிலான துன்புறுத்தலை தன் நாற்பது வருட பணி வாழ்க்கையில் பார்த்ததில்லை என்று சொல்லியிருக்கிறார்.

“இலங்கையில் அதிகாரிகளால் நடத்தப்பட்டிரும் பாலியல் வன்கொடுமைகள் அதிர்ச்சியளிப்பதாகவும், வக்கிரமானதாகவும் இருக்கிறது” என்று அவர் சொல்லியிருக்கிறார்.

26 ஆண்டு கால போரின் போது நடந்த போர் குற்றங்களை எல்லாம் இதுவரை இலங்கை விசாரணை செய்யவில்லை. ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில், தென் அமெரிக்காவில் இருக்கும் மனித உரிமைகள் குழு, பிரேசிலில் இருக்கும் முன்னாள் ஜெனரலான இலங்கை தூதருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்தது. போரின் இறுதியில், பல மருத்துவமனைகளை அழித்து, ஆயிரக்கணக்கானோரை துன்புறுத்திய இராணுவப்படைகளை மேற்பார்வை செய்த குற்றத்திற்காக இவர் மீது வழக்கு பதியப்பட்டது. இவர் இலங்கைக்கு திரும்பிய போது, எந்த முன்னாள் ஜெனரல்கள் மீதும் , போர் நாயகர்கள் மீது கை வைக்க கூடாது என இலங்கை தலைவர் மைத்ரிபாலா சிரிசேனா அறிவித்தார். மனித உரிமை குழுக்கள் எல்லாம் இதை பலமாக விமர்சித்தன.

ஐநாவின் தூதரான ஸீத் ர’அத் அல்-ஹுசைன், அசோசியேடட் பிரஸின் ஐம்பது ஆண்கள்  துன்புறுத்தப்பட்ட கதையை படித்து அதிர்ச்சியடைந்திருப்பதாக சொல்லியிருக்கிறார்.

“நாங்கள் ஒரு விசாரணை நடத்தும் வரை ஐ.நாவால் இதை உறுதி செய்ய முடியாது என்ற போதிலும், நிச்சயமாக இந்த செய்திகள் கொடூரமானவையாகவே இருக்கின்றன. குறிப்பாக, அவை 2016 மற்றும் 2017 ல் நடந்தவை என்றால் மேலும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது” என ஐநாவின் மனித உரிமைகள் கமிஷனரான ஸீத் தெரிவித்திருக்கிறார்.

மனித உரிமைகளுக்கான தளம் ( the Foundation for Human Rights ) எனும் நிறுவனத்தினால் நிர்வாகிக்கப்படும் சர்வதேச உண்மை மற்றும் நீதி புராஜெக்ட், ஐரோப்பா முழுவதிலும் இருக்கும் 60 இலங்கை மக்களிடம் இருந்து சாட்சியங்கள் பெற்றிருக்கின்றனர். இந்த அறுபது பேரில் 52 பேர் அசோசியேடட் பிரஸின் விசாரணையிலும் பங்காக இருந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக இந்த குழு அரசுகளிடம், சர்வதேச நிர்வாகங்களிடமும் பரப்புரை செய்து வருகிறது.

ஆண்களில் பெரும்பாலானோர், தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், வன்புணர்வுக்கும் ஆளானதாக சொல்கின்றனர். சில சமயம் குச்சியில் முட்கரண்டியை சுற்றி துன்புறுத்தியதாகவும் சொல்கின்றனர். இலங்கையில் ஒருபாலீர்ப்பு சட்ட முறைகேடானது, பாலியல் வன்புணர்வு களங்கமாக பார்க்கப்படுகிறது.

தான் 21 நாட்கள் ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டு, 12 முறை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், சிகரெட்டுகளால் சுடப்பட்டு, இரும்பு கம்பிகளால் அடிக்கப்பட்டு, தலை கீழாக தொங்கவிடப்பட்டதாகவும் ‘சாட்சி #205’ சொல்கிறார். இன்னொரு நபர், தன் வீட்டில் இருந்து ஐந்து பேரால் கடத்தப்பட்டு, சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு,கயிறும்,இரும்பு கட்டைகளும், ஒரு பெஞ்சும்,தண்ணீர் பக்கெட்டுகளும் இருந்த ‘டார்ச்சர் ரூம்’ எனும் அறைக்குள் கொண்டு செல்லப்பட்டதை நினைவுகூர்கிறார்.

மூன்றாவது நபர் ஒருவர் தங்களுக்கு அலறல் சத்தம் எல்லாம் பழகிப் போனதாக சொல்கிறார். “ முதல் முறையாக கேட்ட போது பயமாக இருந்தது. பின்னர் எப்போதுமே அலறல் சத்தம் கேட்டதால் அதுவே பழகி விட்டது”.

பாலியன் துன்புறுத்தலுக்கு ஆளானது அவமானமாக இருந்தாலும், அவர்களுடைய கதைகளை சொல்வது தங்களுக்கான கடமை என உணர்வதாக அவர்கள் சொல்கிறார்கள்.

“தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை” என இருபத்து இரண்டு வயதான சாட்சி #205 சொல்கிரார்.

மற்ற பாதிக்கப்பட்டவர்களை போல அல்லாமல், சாட்சி #249 போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் உறுப்பினராக இருந்ததை ஏற்றுக் கொள்கிறார். அவருடைய இடது காலுக்குள் இருக்கும் உலோகத்துண்டினால் அவர் காலை இழுத்து இழுத்து நடக்கிறார்.

கடந்த வருடம், அவர் தன்னுடைய பள்ளி தோழியை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே அவர் டார்ச்சர் ரூமுக்கு இழுத்து செல்லப்பட்டிருக்கிறார்.

அவருடைய அப்பா, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததால் மகன் இங்கிலாந்துக்கு தப்பி சென்றிருக்கிறார்.

அவர்களுடைய கலாச்சாரத்தை அழிக்க உருவாகும் ஒரு பெரிய திட்டத்தின் பங்காகவே தமிழர்களை இந்த அரசு பார்க்கிறது என தமிழர்கள் சொல்கிறார்கள்.

ஐரோப்பாவில் தஞ்சம் கேட்பவர்களுக்கு இன்னும் முடிவு வரவில்லை. சிலர் திருப்பி அனுப்பப்படுவோமோ எனும் பேரச்சத்தில் இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனர்கள் ஆங்கில வகுப்புகளுக்காகவும், மன நல ஆலோசனைக்காகவும் லண்டன் ஆலயத்தில் வாரம் ஒருமுறை சந்தித்துக் கொள்கின்றனர்.

“அதிர்ச்சியை கடந்து வர முடியாதென்றால், மனித இனமே உயிர் பிழைத்திருக்காது” என்கிறார் கரோலின் ரோமிலே,ஆலோசனை கூட்டத்தின் மேற்பார்வையாளர்.

“ ஆனால், அது எளிதல்ல”

கட்டுரையாளர் குறிப்பு –

அமெரிக்காவை சேர்ந்த பெய்ஸ்லி டாட்ஸ், ஏறத்தாழ இருபதாண்டு அனுபவம் இருக்கும் இன்வஸ்டிகேடிவ் ஊடகவியலாளர். ஊடகவியலுக்காக பல விருதுகளையும் வென்றிருக்கிறார். தீவிரவாதம், உளவுத்துறை,பாதுகாப்பு போன்றவை குறித்து பெய்ஸ்லி தொடர்ந்து எழுதி வருகிறார்.

சசிகலா தினகரனுக்கு சொந்தமான 160 இடங்களில் ரெய்ட்…!

விரைவில் அதிமுக தலைமைக் கழகத்திற்கு பூட்டு..!

தேர்வை தள்ளிப்போட 2-ஆம் வகுப்பு குழந்தையை கொலை செய்த சர்வதேச பள்ளி மாணவன்..!

காற்று மாசுபாடு:வாகனங்கள் மோதும் விடியோ..!

டிஜிட்டல்வாசி: இந்த நாள் மற்றுமொரு தரித்திரம்.. ச்சை இது சரித்திரம்!

பணமதிப்பு நீக்கத்தால் பாலியல் தொழில் குறைந்திருக்கிறது…!

மோடி கருணாநிதி சந்திப்பு:ஸ்டாலின் விளக்கம்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*