கைது செய்யப்பட்டவரை முட்டி போட வைத்து பிரஸ் மீட்…! VIDEO

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை – அசோசியேடட் பிரஸ்

#Blackmail politics: ஜெயா டிவியை முடக்க திட்டம்: ரெய்ட் விரிவான பின்னணி..!

புதுச்சேரியில் கொலைக்குற்றம் ஒன்றில் தேடப்பட்டு வந்த தட்டாஞ்சாவடி செந்தில் என்ற நபரை கைது செய்த புதுச்சேரி காவல்துறையினர் அவரை பத்திரிகையாளர்கள் முன்பு  முட்டி போட வைத்துள்ளனர். இது மனித உரிமை ஆர்வலர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. பொதுவாக இது போன்ற நிகழ்வுகள் வட மாநிலங்களில்தான் நடக்கும் என்று ஊடகங்கள் வழியே நாம் நம்ப வைக்கப்பட்டிருக்கும் நிலையில், புதுச்சேரியில் நடந்திருப்பது அதிர்ச்சியை உருவாக்கியிருகிறது. இது தொடர்பாக பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியிருக்கும் பதிவில்:-

“புதுவையில் ராஜீவ் ரஞ்சன் என்கிற IPS அதிகாரி கொலைக் குற்றம் ஒன்றிற்காகத் தேடப்பட்ட தட்டாஞ்சாவடி செந்தில்என்கிற ஒரு ரவுடியை பத்திரிகையாளர் சந்திப்பில் முட்டிபோட்டு நிற்கவைத்த நிகழ்ச்சி சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அந்தப் புகைப்படம், வீடியோ முதலியன வெளியாகியுள்ள நிலையில் புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பாகத் தோழர் சுகுமாரன் அதைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அப்படியான ஒரு ரவுடி கைது செய்யப்பட்டது என்பதில் பிரச்சினையில்லை. மகிழ்ச்சிதான். காவல்துறையின் கடமை சிறப்பாகப் புலனாய்வு செய்து அந்த நபரைச் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கிக் கொடுப்பதுதான். இப்படியாகப் பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்துவது என்பதற்கெல்லாம் ஒரு காவல்துறை அதிகாரிக்கு அவர் எத்தனை உயர் பதவியில் இருந்தாலும் அதிகாரமில்லை. தண்டனை கொடுப்பதற்கான அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு. நீதிமன்றங்களுக்கும் கூட இப்படியான தண்டனை கொடுப்பதற்கு நமது சட்டங்களில் இடமும் இல்லை. இந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டவர்கள் அரசியல்வாதிகளாக இருக்கும் பட்சத்திலும், பெருந் தொழிலதிபர்களாக இருக்கும் பட்சத்திலும் எப்படிக் கூழைக் கும்பிடு போட்டுக் குழைவார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.

பிரச்சினை வீதிக்கு வந்தவுடன் இன்று அந்த அதிகாரி ராஜீவ் ரஞ்சன் damage control முயற்சியில் இறங்கியுள்ளார். காவல் நிலையப் பாலியல் வன்முறை, சித்திரவதைகள், கொலைகள் ஆகியவற்றில் எல்லாம் அப்படியெல்லாம் நடக்கவே இல்லை என ச் சொல்லிப் புன்னகைப்பார்களே அப்படி இதில் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அப்படி அந்த ரவுடியை பொது இடத்தில் முட்டி போட வைத்த நிகழ்ச்சி பத்திரிகைகளில் வந்துவிட்டது. அதனால் அந்த அதிகாரி இன்னும் அபத்தமாக ஒன்றைச் சொல்லியுள்ளார்.

அதாவது அந்த செந்தில் ஒரு பெரிய ரவுடியாம். அவரை கைது செய்துவிட்டாராம். அன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் அந்தச் செந்திலை உட்காரச் சொன்னாராம். ஆனால அந்த ரவுடிதான் வேணாம் சார் நான் மண்டி போட்டு நிக்கிறேன் என அப்படி நின்றுவிட்டாராம். பிறகு அதிகாரி என்ன செய்ய முடியும்? – இதுதான் அவர் சொல்லியுள்ள கதை.

ஒரு உயர் காவல் அதிகாரி என்னமாதிரிக் கதை சொல்லுகிறார் பாருங்கள். இனிமேல் காவல்நிலைய அத்துமீறல்கள் பற்றிய புகார்கள் வந்தாலும் அவனே தூக்கு மாட்டிக் கொண்டான், அந்த ஆளே தன்னை அடித்துக் கொண்டார், லாக்கப்பில் இருந்த அந்தப் பெண் தானே பாலியல் வன்முறை செய்து கொண்டாள் என்றெல்லாம் பதில் அளிப்பார்கள் போலும்.

அந்த அதிகாரி இதில் இன்னொரு பிரச்சினை உள்ளதையும் மறந்து விட்டார். குற்றம் விசாரணை நிலையில் உள்ளபோது குற்றம் செய்ததாக ஐயப்பட்டுக் கைது செய்தவர்களின் புகைப்படம் முதலியன வெளியிடப்படுவதை நீதிமன்றங்கள் தடை செய்துள்ளன. பின்னர் அடையாள அணிவகுப்பு நடத்துவதை எல்லாம் அது சாத்தியமில்லாமல் ஆக்கிவிடும் என்பது முக்கிய காரணம். அந்த அதிகாரி இதையெல்லாம் தெரியாமல் இருந்தாரா, இல்லை தெரிந்துதான் செய்தாரா ஒன்றும் புரியவில்லை. கைது செய்யப்பட்டவர் ஒரு ரவுடி என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியுள்ளார். அதில் நமக்குப் பிரச்சினையே இல்லை. அவர் ரவுடிதான். அவர் கைது செய்யப்பட வேண்டும்தான், அப்படிச் செய்ததற்கு உங்களுக்குப் பாராட்டுக்கள். அதற்கு மேல் நீங்கள் செய்ததுதான் பிரச்சினை சார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*